ரெட்மிக்கு போட்டியாகக் களமிறங்கும் சாம்சங் - பட்ஜெட் விலையில் எம் சீரிஸ் மொபைல்கள்! | Samsung Launched new Galaxy M series mobiles in India

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:11:04 (29/01/2019)

ரெட்மிக்கு போட்டியாகக் களமிறங்கும் சாம்சங் - பட்ஜெட் விலையில் எம் சீரிஸ் மொபைல்கள்!

ட்ஜெட் செக்மேண்டில் ரெட்மி, ரியல்மீ எனப் பிரிந்துபோன தங்கள் வாடிக்கையாளர்களை மீட்கும் முயற்சியாக, 'எம்' சீரிஸில் இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம்செய்துள்ளது சாம்சங். ரெட்மி போலவே குறைவான விலையில், அதிக வசதிகளோடு வந்திருக்கின்றன இவை.

சாம்சங் கேலக்ஸி M10

முதல் மொபைலான சாம்சங் கேலக்ஸி M10-ன் விலை 7,990 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 6.22 இன்ச் இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, 3,400 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 13 + 5 MP டூயல் ரியர் கேமரா மற்றும் 5 MP ஃபிரன்ட் கேமரா ஆகிய வசதிகள் இதில் இருக்கின்றன.  2 GB ரேம் + 16 GB மெமரி வேரியன்ட் 7,990 ரூபாய்க்கும், 3 GB ரேம் + 32 GB மெமரி வேரியன்ட் 8,990 ரூபாய்க்கும் கிடைக்கும்.  ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அனலாக் ஆப்ஷன்கள், இரண்டு M சீரிஸ் மொபைல்களிலுமே உண்டு.

சாம்சங் கேலக்ஸி M20

இதேபோல, சாம்சங் கேலக்ஸி M20-ம் வசதிகளில் அசத்துகிறது. 6.3 இன்ச் இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே, 5,000 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 13 + 5 MP டூயல் ரியர் கேமரா மற்றும் 8 MP ஃபிரன்ட் கேமரா ஆகிய வசதிகள் இதில் இருக்கின்றன.  3 GB ரேம் + 32 GB மெமரி வேரியன்ட் 10,990 ரூபாய்க்கும், 4 GB ரேம் + 64 GB இன்டர்னல் மெமரி வேரியன்ட் 12,990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவிருக்கிறது. USB C போர்ட்டுடன் கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உண்டு.

இந்த இரண்டு மொபைல்களுமே ஆன்லைன் எக்ஸ்க்ளூசிவ் என்பதால், ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்காது. அடுத்த மாதம் 5-ம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங்கின் இ-ஸ்டோரில் இவற்றின் விற்பனை தொடங்க இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க