'கால் அட்டெண்டு பண்ணாவிட்டாலும் பேசுவது கேட்கும்'- அலறவைக்கும் ஆப்பிள் பக் | This Apple bug lets your others hear you even when you are not attending the calls?

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:05:44 (30/01/2019)

'கால் அட்டெண்டு பண்ணாவிட்டாலும் பேசுவது கேட்கும்'- அலறவைக்கும் ஆப்பிள் பக்

ஃபேஸ்டைம் (FaceTime), ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பிரபலமான வீடியோ காலிங் சேவை. இந்த சேவையில் இருக்கும் மிக மோசமான கோளாறு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்னை ஐஓஎஸ் 12.1 வெர்ஷன் மற்றும் அதற்கு கீழான ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களில் இந்த பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. அப்படி என்ன கோளாறு?

ஆப்பிள்

இதில் ஒருவருக்குக் கால் செய்து அவர் அட்டெண்டு செய்யாவிட்டாலும் உங்களால் அவர் மைக்கில் வரும் ஒலியை கேட்க முடிகிறது. இது எப்போது நடக்கிறது என்று சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், ஒருவருக்கு ரிங் அடித்துக்கொண்டிருக்கும்போதே இன்னொருவரை குரூப் காலில் சேர்த்தால், அதற்கு முன்பு ரிங் அடித்துக் கொண்டிருந்த நபரும் காலில் இணைந்துவிட்டதாக எடுத்துக்கொள்கிறது ஃபேஸ்டைம். இதனால் அவர் காலை அட்டெண்டு செய்யாமலையே அவரது ஒலி கேட்கத் தொடங்குகிறது. இதை சிகாகோவை  சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட இந்த பிரச்னை சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயை போலப் பரவத்தொடங்கியிருக்கிறது. பலரும் ஃபேஸ்டைமை பல்வேறு முறைகளில் சோதித்துப் பார்க்க சிலர் காலை கட் செய்ய 'volume Down' அல்லது 'Power' பட்டனை கிளிக் செய்தால்  வீடியோவையும் கூட பார்க்கமுடிந்திருக்கிறது. 

அந்த ட்வீட் மற்றும் வீடியோ: https://twitter.com/i/status/1089967572307640325

பேஸ்டைம்

ப்ரைவசியை மிகவும் பாதிக்கும் இந்த கோளாற்றால் ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் அனைவரும் அந்த நிறுவனத்திடம் கடும் அதிருப்தியைத் தெரிவிக்க, ஆப்பிள் நிறுவனம் கூடிய விரைவில் இது சரிபார்க்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. அதே நேரத்தில் ஃபேஸ்டைம்மில் குரூப் கால் சேவையை நிறுத்திவைத்துள்ளது. இந்த பிரச்னை முடியும்வரை இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க செட்டிங்ஸ் சென்று ஃபேஸ்டைம்மை 'disable' செய்வது நன்று.

Iphone

photo credit: https://twitter.com/SuperSaf

சில நாட்களுக்கு முன் நடந்த CES விழாவில்தான் மற்ற நிறுவனங்களைக் கலாய்க்கும் வண்ணம் 'தங்கள் போனில் இருப்பது தங்கள் போனில் மட்டுமே இருக்கும்' எனப் பெரிதாக பேனர் ஒன்றை வைத்து ப்ரைவசிக்கு தாங்கள் தரும் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியிருந்தது ஆப்பிள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க