தவற்றைக் கண்டுபிடித்த 14 வயது சிறுவனுக்கு நன்றி தெரிவித்த ஆப்பிள்! | Apple thanks 14 year boy for finding an important bug

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (02/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (02/02/2019)

தவற்றைக் கண்டுபிடித்த 14 வயது சிறுவனுக்கு நன்றி தெரிவித்த ஆப்பிள்!

பிரபல நிறுவனமான ஆப்பிள், தங்களது சிறிய கோளாறுக்காக அனைத்து ஐபோன் மற்றும் ஐபாட் வாடிக்கையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது. சமீபத்தில், தங்களது ஃபேஸ்டைம் (FaceTime) வீடியோ காலிங் சேவையில், ஒருவருக்கு கால் செய்து, அவர் அட்டெண்டு செய்யாவிட்டாலும் அவரது மைக்கில் வரும் ஒலியைக் கேட்கவைக்கும் கோளாறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆப்பிள்

இந்தப் பிரச்னை ஐஓஎஸ் 12.1 வெர்ஷன் மற்றும் அதற்குக் கீழான ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களில் இருந்துள்ளது. இந்த தவற்றை முதன் முதலாகக் கண்டுபிடித்தது தாம்சன் என்னும் 14 வயது சிறுவன். முதலில், ஆப்பிள் இதற்கு சைலன்ட்டாகத் தீர்வு கண்டுவிடலாம் என்று நினைத்திருந்தது. இப்போது, எதிர்பாராத விதமாக அனைவருக்கும் இந்தப் பிரச்னை தெரியவந்துள்ளதால், முதலில் இதைக் கண்டறிந்த அந்தச் சிறுவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தற்போது நன்றியைத் தெரிவித்துள்ளது ஆப்பிள்.

facetime

மேலும், இந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் ஒரு அப்டேட் வரும், அதைப் பதிவிறக்கினால் மீண்டும் எப்போதும் போல ஃபேஸ்டைமைப் பயன்படுத்தமுடியும் எனத் தெரிவித்துள்ளது ஆப்பிள். தற்காலிகத் தீர்வாக இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருந்த குரூப் காலிங் சேவையை நிறுத்திவைத்துள்ளது அந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க