"கொலை, ஆக்கிரமிப்பு, சூறையாடல்...PUBG வேணாம்"- நீதிமன்ற படியேறிய 11 வயது சிறுவன் | This 11 year old wants ban on PUBG

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:06:00 (03/02/2019)

"கொலை, ஆக்கிரமிப்பு, சூறையாடல்...PUBG வேணாம்"- நீதிமன்ற படியேறிய 11 வயது சிறுவன்

PUBG மொபைல் கேமானது சந்தேகமின்றி கடந்த ஆண்டு இந்திய மக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதைத் தினமும் சுமார் 30 மில்லியன் வீரர்கள் விளையாடுகின்றனர். இது நல்ல பொழுதுபோக்கை தந்தாலும் ஒரு சில நாட்களுக்குப் பிறகு சிலர் இதற்கு அடிமையாகிவிடுகின்றனர். குஜராத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் இதனால் ஏற்கெனவே இந்த கேம்முக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

PUBG

இந்நிலையில் தற்போது அஹத் நிஜாம் என்னும் 11 வயது சிறுவன் தங்கள் மாநிலத்தில் இந்த கேமை தடை செய்யவேண்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளான். ஏற்கெனவே மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு இதைப்பற்றி கடிதம் எழுதியிருந்த அந்த சிறுவன் அதற்குப் பதில் கிடைக்கப்பெறாததால் இந்த முடிவை எடுத்துள்ளான்.

வன்முறை

தாயின் உதவியுடன் நிஜாம் தாக்கல் செய்த மனுவில், இந்த கேமானது பலரை அடிமையாக்குகிறது; வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, சூறையாடல் போன்றவற்றை ஊக்குவிக்கிறது. எனவே இதை மகாராஷ்டிரா அரசு தடைசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதைப் போன்ற வன்முறையான கேம்களை கட்டுப்படுத்த ஆன்லைன் கேம்களை கண்காணிக்கும்  ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வகையில் இந்த சிறுவன் PUBG-யால் பாதிக்கப்பட்டான் என்பது பற்றி இதுவரை எந்த தகவல்களையும்  தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க