'52 மெகா பிக்ஸல் கேமரா' கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறதா சோனி? | Sony will launch new smartphone with 52MP Camera

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (03/02/2019)

கடைசி தொடர்பு:11:45 (03/02/2019)

'52 மெகா பிக்ஸல் கேமரா' கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறதா சோனி?

ஸ்மார்ட்போன்

ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராதான் இன்றைக்கு அதன் விற்பனையைத் தீர்மானிக்கும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. மொபைல் நிறுவனங்களும் அதற்கு ஏற்ற வகையில் கேமராவின் திறனை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்மார்ட்போன்களில் ஒரே ஒரு கேமராதான் இருக்கும். ஆனால் தற்பொழுது ஒரு மொபைலில் நான்கு கேமராக்கள் கூட இருக்கின்றன. அதே போல கேமராவின் அளவையும் மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே வருகின்றன. அண்மையில்தான் ஷியோமி நிறுவனம் 48MP கேமராவைக் கொண்ட ரெட்மி நோட் 7 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் தற்பொழுது அதை விட அதிக மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை சோனி அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனி

Xperia XZ4 என்ற இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்கள் இருக்கலாம் எனவும் அதில் ஒரு கேமரா 52 மெகா பிக்ஸல் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்பொழுது அதிக பேட்டரி திறன் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வரவேற்பைப் பெறுவதால் அதற்கேற்றவாறு 4400 mAh பேட்டரி இதில் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.