புது மேப்ஸ்...புது கன்ஸ்...பப்ஜி ஃப்யூச்சர் பிளான்ஸ்! - பிப்ரவரி இதழ் #TechTamizha | 'New Maps... New Guns... What are PUBG's future plans? -February Tech Tamizha magazine is out!

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (04/02/2019)

கடைசி தொடர்பு:10:59 (04/02/2019)

புது மேப்ஸ்...புது கன்ஸ்...பப்ஜி ஃப்யூச்சர் பிளான்ஸ்! - பிப்ரவரி இதழ் #TechTamizha

பப்ஜி வெறியர்களே, இந்த மாத டெக் தமிழாவை மிஸ் பண்ணிறாதீங்க!

வணக்கம் டெக் வாசகர்களே! பிப்ரவரி மாத டெக் தமிழா தயார். பப்ஜி ஆடுவீர்களா? நீங்க கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத இதழ் இந்த மாத டெக் தமிழா. காதலர் தின மாதத்தில் மொபைல் உலகின் சமீபத்திய crush-ஆன பப்ஜி எப்படி உருவானது? இதை வடிவமைத்த பிரண்டன் க்ரீன் யார்? பப்ஜியின் வருங்காலத் திட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளை இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் பப்ஜி ஸ்பெஷல் கட்டுரை/நேர்காணலில் தெரிந்துகொள்ளுங்கள்!

ஷியோமியின் புதிய MI சவுண்ட்பார், Zenfone Max Pro M2 ஆகிய கேட்ஜெட்களின் ப்ளஸ், மைனஸ் என்னவென்று விவரிக்கும் #GadgetReview-வை இந்த இதழில் படித்திடலாம். மேலும் CES 2019, #10YearChallenge எனக் கடந்த மாதத்தின் பல முக்கிய டெக் தலைப்புகளைப் பல சுவாரஸ்யமான கட்டுரைகள் மூலம் தொடுகிறது இந்த பிப்ரவரி மாத இதழ்.

பப்ஜி

இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/TT-Feb-19

இதழை நேரடியாக லிங்க் மூலம் டிரைவிலிருந்து டவுன்லோடு செய்யாமல் இனிமேல் நேரடியாக விகடன் ஆப்பிலேயேகூட படிக்கலாம். http://bit.ly/2NwiUv3 இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் 'டெக் தமிழா' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாத போதும் கூடப் படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.

இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/TT-Feb-19

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்களிடமிருந்து இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் கூற மறவாதீர்கள். நன்றி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்