பிளே ஸ்டோரில் கூகுள் நீக்கிய 29 ஆப்கள்!- அதிர்ச்சிக் காரணம் | Google has removed these 29 apps from Play Store

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (05/02/2019)

பிளே ஸ்டோரில் கூகுள் நீக்கிய 29 ஆப்கள்!- அதிர்ச்சிக் காரணம்

முகத்தைப் பொழிவாக்குவது, மேக்கப் செய்வது, பொம்மை போல் மாற்றுவது, கார்ட்டூன் முகம் போன்ற பல்வேறு வித்தியாசங்களுடன் கூடிய ஆப்கள் ஒவ்வொன்றும் புது விதமாகவும், தனித்துவமாகவும் உள்ளதால் இது பொதுமக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது. இதனால் பல நிறுவனங்கள் புதிய புதிய செயலிகளை உருவாக்கி வெளியிடத் தொடங்கின. குறிப்பாகப் பெண்கள் இந்தச் செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், சில போலியான செயலிகள் வாடிக்கையாளர்களின் தரவுகள் மற்றும் புகைப்படங்களை திருடி அதிக பணத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் விற்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுவரை இது போன்ற போலிச் செயலிகளை ஆசியாவைச் சேர்ந்த மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் முக்கியமாக இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

பயனர்கள் இது பற்றி எதுவும் அறியாமல் விளம்பரங்களை மட்டும் பார்த்துச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்துவிடுகின்றனர். செயலிகள் உபயோகப்படுத்தும் போது அதன் நடுவே ஆபாச விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது பற்றி சமீபத்தில் கூகுள் ஆய்வு நடத்தியது. அதில் தரவுகள் திருடப்பட்டுள்ளது உண்மையாகியுள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட் போன்களில் உள்ள 29 ஆப்களை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். 

Pro Camera Beauty Cartoon Effect
Art Effect Photo Editor
Wallpapers HD Magic Art Filter Photo Editor
Fill Art Photo Editor ArtFlipPhotoEditing
Art Filter Cartoon Art Photo
Artistic effect Filter Art Editor
Beauty Camera Selfie Camera Pro
Horizon Beauty Camera Super Camera
Art Effects for Photo Awesome Cartoon Art
Art Filter Photo Art Filter Photo Effcts
Prizma Photo Effect Cartoon Art Photo Filter
Art Filter Photo Editor Pixture
 Art Effect Photo Art Effect
Cartoon Photo Filter Cartoon Art Photo
Emoji Camera  

நீக்கப்பட்டச் செயலிகள்