'எதுனா ஐடியா இருந்தா கொடுங்களேன்!' - எதற்காகக் கேட்கிறது ஒன் ப்ளஸ்? | One plus asks customers for a new feature idea for their Oxygen OS

வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (05/02/2019)

கடைசி தொடர்பு:21:46 (05/02/2019)

'எதுனா ஐடியா இருந்தா கொடுங்களேன்!' - எதற்காகக் கேட்கிறது ஒன் ப்ளஸ்?

பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன் ப்ளஸ், தனது இயங்குதளமான OxygenOS பற்றிய கருத்துகளை வாடிக்கையாளர்களிடம் கேட்பது வழக்கம். ஆனால் இப்போது, இதில் ஒருபடி மேலே சென்று, இப்போது என்ன புதிய வசதியைக் கொண்டுவரலாம் என்று வாடிக்கையாளர்களிடமே ஐடியா கேட்டிருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம்.

ஒன்ப்ளஸ்

ஆண்ட்ராய்டுக்கு மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த இயங்குதளத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் வசதி என்ன என்பதை இந்த Product Manager Challenge-ன் மூலம் தெரிவிக்கலாம். விருப்பம் இருக்கும் வாடிக்கையாளர்கள், ஐடியாவுடன் 4 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். அந்த 4 கேள்விகள்,

1. இந்த வசதி எதற்காக வேண்டும்?
2. எந்த மாதிரியான பயன்பாட்டாளர்களுக்கு இது தேவைப்படும்?
3. இது, அவர்களுக்கு எந்த அளவில் உதவும்?
4. இதை ஒட்டிய ஏதேனும் வசதி ஏற்கெனவே இருக்கிறதா?

ட்விட்டர்

பிப்ரவரி 22 வரை இந்தப் போட்டியில் பங்குபெறமுடியும். இதில் வெற்றிபெறுபவரின் பெயர், அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு ஒன் ப்ளஸ் வாடிக்கையாளர் ஃபோரம் தளத்தைப் பின்தொடரவும். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஒரு ஆடியோ பக் (bug) காரணமாக மொபைல் கால் பேசுகையில், சத்தம் மிக மோசமாக சில வாடிக்கையாளர்களுக்கு இருந்துவருகிறது. முதலில், அதைச் சரிசெய்யுங்கள் என்று அவர்கள் கூறிவருகின்றனர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க