`உங்கள் பாஸ்வேர்டு சேஃப் தானா?' - செக் செய்யக் கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதி! | Google introduces new extension to check for safety of passwords

வெளியிடப்பட்ட நேரம்: 00:53 (08/02/2019)

கடைசி தொடர்பு:07:07 (08/02/2019)

`உங்கள் பாஸ்வேர்டு சேஃப் தானா?' - செக் செய்யக் கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதி!

செக்-அப் என்றதும் பலருக்கும் மெடிக்கல் செக்-அப்தான் நினைவுக்கு வரும். ஆனால், நம் இணையப் பாதுகாப்புக்காகவும் புதிய செக்-அப் வசதி ஒன்று வந்துள்ளது. ஆம், 'Password Checkup' என்னும் புதிய Chrome extension ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள். இந்த Chrome extension மூலம் நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதா என்பதைக் கண்டறியமுடியும். ஏற்கெனவே பாஸ்வேர்டு ஏதேனும் டேட்டா லீக்கில் பறிபோகியுள்ளதா போன்ற விஷயங்களை இது கண்காணிக்கும். இதன்மூலம், பாதுகாப்பு பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணலாம். இப்படிச் செய்வதன் மூலம் முடிந்தவரை ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும் என நம்புகிறது.

Chrome

கூகுள் அறிக்கையின்படி, ஒரு மூன்றாம் தரப்பு டேட்டா லீக்கினால் பாஸ்வேர்டு பறிபோனது தெரியவந்தால் உடனடியாக இது கண்டறியும். அதுவும் அது கூகுள் கணக்காக இருந்தால் தானாகவே அதை மாற்றவும் செய்கிறது. அந்த கூகுள் கணக்குக்கு எந்த ஒரு பாதுகாப்பு பிரச்னையும் வாராமலும் இது பார்த்துக்கொள்ளுமாம்.

extension

ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள 400 கோடி கணக்குகளில் நீங்கள் டைப் செய்யும் username அல்லது பாஸ்வேர்ட் இருக்கிறதா என்று ஒப்பிடும் இந்த extension. அப்படி இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுமாறு உங்களுக்கு எச்சரிக்கையைத் தரும். உடனடியாக நீங்கள் பாஸ்வர்ட்டை மாற்றிவிடலாம். இப்படி செக் செய்யும்போது கூகுளால் கூட இந்த பாஸ்வர்ட்டை பார்க்கமுடியாத அளவில் encryption செய்யப்பட்டிருக்குமாம்.

கூகுள் Password Checkup

இதை எப்படி பயன்படுத்துவது?

இது Chrome பிரவுசரில் மட்டும்தான் இயங்கும். அதில் மேலே இருக்கும் வசதிகளில்  'More tools' சென்று 'Extensions' கிளிக் செய்து 'Password Checkup' என்று தேடினால் இந்த extension-ஐ கண்டுபிடிக்கலாம். அதை 'Add to Chrome' என்று கொடுத்துவிட்டால் போதும். இனி நீங்கள் லாகின் செய்யும்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்டை  பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று செக் செய்து சொல்லும் இந்த extension. இது முதல் வெர்ஷன்தான் இன்னும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு மேலும் மேம்படும் இது என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பல ஆஃப்களை நீக்கியது. பிரைவசி சர்ச்சைக்குப் பிறகு மக்களின் தகவல் பாதுகாப்பில் கூகுள் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வதை  மக்களிடம் காட்டவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் டெக் வட்டாரங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க