முடிவுக்கு வரும் கான்ஸ்பிரஸி வீடியோக்களின் ஆதிக்கம்... யூடியூபின் கிடுக்கிப்பிடி! | How is youtube tackling videos relating to conspiracy theories?

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (25/02/2019)

கடைசி தொடர்பு:16:27 (25/02/2019)

முடிவுக்கு வரும் கான்ஸ்பிரஸி வீடியோக்களின் ஆதிக்கம்... யூடியூபின் கிடுக்கிப்பிடி!

யூடியூப்பினால் இவற்றை தடைசெய்ய முடியாது. உண்மையோ பொய்யோ ஒருவர் தனது கருத்தை தெரிவிக்க முழு உரிமை உண்டு. ஆனால் இதைப் போன்ற வீடியோக்கள் வேறு மாதிரியான தாக்கத்தைச் சமூகத்தில் ஏற்படுத்த வாய்ப்புண்டு. 

முடிவுக்கு வரும் கான்ஸ்பிரஸி வீடியோக்களின் ஆதிக்கம்... யூடியூபின் கிடுக்கிப்பிடி!

யூடியூப் இன்று உலகின் முன்னணி வீடியோ தளமாக இயங்கிவருகிறது. மக்களால் தினமும் கோடிக்கணக்கில் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இதில் எவை தங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்கின்றன, எவை அவற்றை மீறுகின்றன எனக் கண்காணிப்பதே யூடியூப்பிறகு பெரும் வேலையாக இருக்கிறது. இதில் காப்புரிமை பிரச்னைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும். இதைப் பெரும்பாலும் தங்களது மேம்பட்ட அல்காரிதங்கள் மூலம் தீர்க்கிறது யூடியூப். இந்நிலையில் தவறான, பொய்யான கோட்பாடுகள் மக்களிடையில் பரவ யூடியூப் முக்கியக் கருவியாக இருக்கிறதெனக் குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கியுள்ளன.

உலகம் உருண்டையானது அல்ல எனக் கூறும் `Flat Earth Community' யூடியூப்பினால்தான் நல்ல வளர்ச்சியைக் கண்டதாக ஓர் ஆராய்ச்சி தெரிவித்தது. 'பூமி தட்டையான கிரகம்தான் நம்மை இவ்வளவு நாள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்' என்கின்றனர் இவர்கள். கடந்த சில  நூற்றாண்டுகளில் நடந்த அறிவியல் வளர்ச்சி அனைத்தையும் பொய்யெனக் கூறுகின்றது இந்த Flat Earth Community. இவர்களில் சிலரை மட்டும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறிய ஆய்வு ஒன்றில் வெகு சிலரை தவிர அனைவருமே கடந்த 2 ஆண்டுகளுக்குள்தான் இந்த கோட்பாட்டை நம்பத்தொடங்கியுள்ளனர் எனத் தெரியவந்தது. அதற்குமுன் வரை இவர்களும் உலகம் உருண்டையானது என்றுதான் கூறியிருக்கின்றனர். இவர்களில் பலரும் யூடியூப்பில் இருக்கும் சில வீடியோக்களைப் பார்த்தே இந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். பலரும் இவர்களைக் கலாய்க்கவே இந்த வீடியோக்களைப் பார்த்துள்ளனர். பின்பு அந்த வீடியோக்களால் இவர்களே அந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். 

பிளாட் earth

யூடியூப்பினால் இவற்றைத் தடைசெய்ய முடியாது. உண்மையோ பொய்யோ ஒருவர் தனது கருத்தைத் தெரிவிக்க முழு உரிமை உண்டு. இந்த நம்பிக்கையால் மிகப்பெரிய பிரச்னையும் வரப்போவதில்லை. ஆனால் யூடியூப்பில் இந்த கோட்பாடு மட்டுமல்லாமல் பல தவறான கோட்பாடுகளுக்கு ஆதரவான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதை நம்பும் விதத்தில் பதிவிடுவதன் மூலம் பலரும் அவற்றை நம்பவும் தொடங்கி விடுகின்றன. இந்த வீடியோக்கள் பெரும்பாலும் இந்தத் தளத்தினாலேயே பரிந்துரைக்கப்படுகிறது. முந்தைய தேடல்கள், பார்க்கும் வீடியோக்கள், விருப்பு, வெறுப்புகள் என அனைத்தையும் கணக்கில் கொண்டு வீடியோக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றில் இவையும் சாதாரண, உண்மையான அறிவியல் வீடியோவை போன்று பரிந்துரைக்கப்படுவதுதான் பிரச்னை. மொழி வேறுபாடின்றி அனைத்து இடங்களிலும் இந்த வீடியோக்கள் இருக்கின்றன. தமிழிலும் நம்பும் விதத்தில் சுவாரஸ்யமாக தவறான விஷயங்களை எடுத்துரைக்கும் இந்த சேனல்கள் போலிச் செய்திகளைப் போல் அல்லாமல் இதைப் போன்ற வீடியோக்கள் வேறுமாதிரியான தாக்கத்தைச் சமூகத்தில் ஏற்படுத்த வாய்ப்புண்டு. 

அதில் ஒன்றுதான் `Anti-Vaccination'. தடுப்பு ஊசிகள் வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தும் பல சேனல்கள் யூடியூப்பில் இருக்கின்றன. இவற்றின் தாக்கத்தில் பலரும் தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் தடுப்பு ஊசிகள் வேண்டாம் எனக் கூறத்தொடங்கியுள்ளனர். இந்தக் கோட்பாடு என்பது மருத்துவத் துறையையே பின்னோக்கி அழைத்துச் செல்கின்றது எனப் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். Flat Earth பதிவுகளைவிட ஆபத்தான விளைவுகளை உண்டாக்கவல்லது இந்த வீடியோக்கள். 

Anti Vaccination வீடியோ

இதையும் யூடியூப்பினால் நீக்கமுடியாது. ஆனால் இந்த `Anti-Vaccination' கொள்கைகளைப் பரப்பும் வீடியோக்களுக்கு விளம்பரங்கள்/பரிந்துரைகள் தராமல் கட்டுப்படுத்தமுடியும். அதாவது இந்த வீடியோ வெளியிடும் சேனல்கள் இனி அவற்றை வைத்து பணம் சம்பாதிக்க முடியாது. தங்கள் தளத்தில் எந்த வீடியோக்களில் எல்லாம் விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்பதில் பெரும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை இந்த வீடியோக்கள் மீறுகின்றன எனக் கூறியுள்ளது அந்த நிறுவனம்.

ஏற்கெனவே கடந்த மாதம் புதிய மென்பொருள் ஒன்றின் உதவியுடன் Flat Earth போன்ற தவறான கோட்பாடுகளை பரப்பும் வீடியோக்களை பெருமளவில் மக்களிடம் சேராமல் யூடியூப் கட்டுப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதில் என்ன சிக்கல் என்றால் இவற்றைக் கண்டுபிடிக்க கணினிகளால் மட்டும் கண்டுபிடிக்கமுடியாது. இந்த மென்பொருளை வடிவமைக்கவே 6 மாத காலம் எடுத்தது. இத்துடன் புதிய ஆட்களையும் இந்த வீடியோக்களை மதிப்பிடும் வேலைகளுக்காகச் சமீபத்தில் எடுத்துவருகிறது. இவர்களின் உதவியுடன் இந்த மென்பொருள் காலப்போக்கில் இந்த வீடியோக்கள் கண்டுபிடிப்பதில் மேம்படும். இப்போதைக்கு ஆங்கில மொழிக்கு மட்டும்தான் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

youtube kids

இப்படித் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிற போதிலும் தற்கொலை டிப்ஸ் கொடுக்கும் வீடியோ யூடியூப்பின் கிட்ஸ் தளத்தில் வந்ததாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. முதலில் ஒரு குழந்தைகள் கேம் பற்றிப் பகிரும் வீடியோவின் நடுவில் ஒருவர் தோன்றி தற்கொலை எப்படிச் செய்யலாம் என டிப்ஸ் கொடுக்கிறார். இதைப் பார்த்து ஷாக் ஆன தாய் ஒருவர் இதைக்குறித்து புகார் அளித்துள்ளார். யூடியூப்பை இப்படி ஏமாற்றவும் முடியும் என்பதை இது காட்டுகிறது. இந்தப் பிரச்னைகளையும் விரைவில் களைந்தெடுக்க வேண்டும் யூடியூப்.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் இன்னும் ஒரு வீடியோவில் இருக்கும் நல்லது கேட்டது என்ன எனக் கண்டுபிடிக்கும் அளவுக்கு அவை இன்னும் மேம்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளை இன்றே யூடியூப் எடுக்க ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான். இதை மற்ற சமூகவலைதளங்களும் விரைவில் செய்ய ஆரம்பித்தால்தான் இணையம் என்பது வருங்காலத்தில் மேலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close