'நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு'... ஸ்மார்ட் பல்பை அறிமுகப்படுத்திய ஷியோமி! | Xiaomi now introduces a new smart bulb too

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (25/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (25/02/2019)

'நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு'... ஸ்மார்ட் பல்பை அறிமுகப்படுத்திய ஷியோமி!

ஷியோமி, வெறும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மட்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பது, கடந்த சில ஆண்டுகளில் அவை அறிமுகப்படுத்தியிருக்கும் பொருள்களைப் பார்த்தாலே நமக்குப் புரியும். ஸ்மார்ட் டி.வி தொடங்கி, ஃபிட்னெஸ் பேண்ட், ஏர் ப்யூரிஃபையர், சூட்கேஸ் என நீண்டுகொண்டேபோகிறது இந்தப் பட்டியல். இதில் புதிய வரவாக, ஸ்மார்ட் பல்பு ஒன்றை பார்சிலோனாவில் நடந்துகொண்டிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி.

ஷியோமி ஸ்மார்ட் பல்பு

MI LED  ஸ்மார்ட் பல்பு என அழைக்கப்படும் இதில் என்ன ஸ்பெஷல் என்றால், இவற்றை உங்களால் வைஃபை மூலம் மொபைலுடன் கனெக்ட் செய்யமுடியும். மொபைலில் MI Home ஆப்பை கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். அறிமுகப்படுத்தியுள்ள  இரண்டு மாடல்களில் ஒன்று, 16 மில்லியன் கலர்கள் வரை சப்போர்ட் செய்யும். வேண்டுமென்ற கலரை மொபைலில் இருந்தே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இன்னொன்று, சாதாரணமாக ஒரே கலரில் வரும். ஆனால், இதன் வெளிச்சத்தை ஏற்றி இறக்கிக்கொள்ளலாம்.

கூகுள் அசிஸ்டன்ட்

ஐரோப்பாவில் சாதாரண பல்பு 9.9 யூரோக்களுக்கும், மில்லியன் கலர்கள் சப்போர்ட் செய்யும் பல்பு 19.9 யூரோக்களுக்கும் விற்கப்படுமாம். வெளிநாடுகளில் அறிமுகமாகும் ஷியோமி சாதனங்கள் அனைத்தும் இந்தியாவில் வெளியாவதில்லை என்றாலும், இது கண்டிப்பாக இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தால், முதல் மாடல் 1,000 ரூபாய்க்குக் கீழும், இரண்டாவது மாடல் 2,000 ரூபாய்க்குக் கீழும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். கூடுதல் சிறப்பாக, இவை கூகுளின் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட்டுடன் கிடைக்கும். அதனால், உங்கள் குரலின் மூலமே வண்ணங்களை மாற்றவும், வெளிச்சத்தை ஏற்றி இறக்கவும் முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close