5 கேமராக்கள், 240 MP தரம்... அசத்தும் நோக்கியா #Nokia9PureView | nokia launches new smartphone Nokia 9 PureView with 5 camera

வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (27/02/2019)

கடைசி தொடர்பு:18:36 (27/02/2019)

5 கேமராக்கள், 240 MP தரம்... அசத்தும் நோக்கியா #Nokia9PureView

கேமரா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறது நோக்கியா.

5 கேமராக்கள், 240 MP தரம்... அசத்தும் நோக்கியா #Nokia9PureView

பார்சிலோனாவில் தற்பொழுது நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்வில் பல ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் போல்டபிள் டிஸ்ப்ளே மற்றும் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக இருக்க நோக்கியா கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறது. முழுக்க முழுக்க கேமராவில் கவனத்தைச் செலுத்தி உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா. நோக்கியா 9 ப்யூர்வியூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் மொத்தம் ஐந்து கேமராக்களை கொடுத்துள்ளது நோக்கியா. 

நோக்கியா ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த ஸ்மார்ட்போன் கடந்த வருட இறுதியிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், சற்று காலதாமதமாகவே வெளியாகியுள்ளது.

நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்?

ஸ்மார்ட்போன்

10 வருடங்களுக்கு முன்னால் ஸ்மார்ட்போன்கள் பிரபலமாகத் தொடங்கிய காலகட்டம் தொடங்கிப் பல வருடங்களுக்கு ஸ்மார்ட்போனில் ஒரே ஒரு கேமராதான் இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன்னால் டூயல் கேமராக்கள் பிரபலமாகத் தொடங்கின. அது மட்டுமன்றி அந்த எண்ணிக்கை 3, 4 என அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்பொழுது நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போனில் 5 கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு ப்யூர்வியூ என்ற பெயரின் கீழ் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது நோக்கியா. பழைய நோக்கியா இருந்த காலத்தில் இந்தப் பெயர் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ப்யூர்வியூ பிராண்டின் கீழ் 41 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்ட Nokia PureView 808 மற்றும் Nokia Lumia 1020 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது நோக்கியா. 41 மெகா பிக்ஸல் கேமரா என்ற சாதனையைப் பல வருடங்களுக்கு மற்ற மொபைல் நிறுவனங்களால் தொடக்கூட முடியவில்லை. நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கிய போது ப்யூர்வியூ பிராண்டும் அவர்களது கைகளுக்குச் சென்றது. இந்நிலையில் கடந்த வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து அதை வாங்கியது தற்பொழுது நோக்கியா மொபைல்கள் தயாரிக்கும் உரிமையை வைத்துள்ள HMD குளோபல் நிறுவனம். அதைத் தொடர்ந்துதான் மீண்டும் நோக்கியா 9 ப்யூர்வியூ என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட்போன் நோக்கியா சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள முன்புற கேமரா 20 MP திறன் கொண்டது. 

nokia 9

நோக்கியா 9 ப்யூர்வியூவில் இருக்கும் 5 கேமராக்களும் 12 மெகாபிக்ஸல் திறன் கொண்டவை. ஒரு போட்டோவை எடுக்கும் போது இவை அனைத்தும் ஒரே நேரத்தில் செயல்பட்டு ஒரே புகைப்படத்தை உருவாக்கும். இப்படிக் கிடைக்கும் படம் 240MP உள்ள ஒரு கேமராவில் எடுக்கப்பட்ட படத்தின் தரத்துடன் இருக்கும். 5 கேமராக்கள் என்பதால் ஒற்றைக் கேமராவுடன் ஒப்பிடும் போது இவை 10 மடங்கு அதிகமான ஒளியை உள்வாங்கும் திறன் கொண்டவை. இந்த கேமராக்களில் உள்ள லென்ஸ்களை Carl Zeiss நிறுவனம் உருவாக்கியுள்ளது.

நோக்கியா 9 ப்யூர்வியூ


5.99 இன்ச் P-OLED டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. பாதுகாப்பிற்காக Gorilla Glass 5 இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல ஸ்மார்ட்போன்கள் குவால்காமின் அண்மைய வெளியீடான Snapdragon 855 புராஸசரைப் பயன்படுத்தும் நிலையில் நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போனில் Snapdragon 845 என்ற புராஸசரே பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 GB ரேம் மற்றும் 128 GB இன்டெர்னல் மெமரி இதில் இருக்கிறது. பிங்கர் பிரின்ட் சென்ஸார் டிஸ்ப்ளேவுக்கு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது. பல ஸ்மார்ட்போன்கள் நாட்ச் இல்லாமல் வெளியாகிவிட்ட நிலையில் இதிலும் நாட்ச் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக டிஸ்ப்ளேவில் பெரிய bezel-கள் மேலும் கீழும் இருக்கின்றன. இதன் விலை அமெரிக்க டாலர்களாக $699 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இது விற்பனைக்கு வரக்கூடும். 50,000 ரூபாய் விலையில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close