கேபிளைத் தொடர்ந்து இன்டர்நெட் காலிங்குக்கும் புதிய விதிமுறைகள்! - டிராய் தகவல் | Trai to introduce new regulatory framework for OTT services like internet calling

வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (27/02/2019)

கடைசி தொடர்பு:19:29 (27/02/2019)

கேபிளைத் தொடர்ந்து இன்டர்நெட் காலிங்குக்கும் புதிய விதிமுறைகள்! - டிராய் தகவல்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் கேபிள் மற்றும் DTH விலைகளில் மாற்றியமைக்கும் புதிய விதிமுறைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இது கடந்த மாதம் அமலுக்கு வந்தது. இந்தப் புதிய விதிமுறைகள் மக்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது இந்தப் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற மார்ச் 31 வரை கால அவகாசம் அளித்திருக்கும் டிராய் இப்போது ஓவர்-தி-டாப் (OTT) சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரும் விதிமுறைகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Internet calling

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவில் தற்போது நடந்துவரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் இதை டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தார். அவர் கூறுகையில், ``OTT சேவைகளுக்கான புதிய திட்டங்களுக்கான மாதிரி இப்போதே எங்களிடம் உள்ளது. விரைவில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பரிந்துரைகளுடன் உங்களைச் சந்திப்போம்’’ என்றார்.

டிராய்

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் 5G தொழில்நுட்பத்தால் எந்த மாதிரி சேவைகள் மாறும் என எடுத்துக்காட்டிவருகிறது. OTT குறித்த இந்தப் புதிய விதிமுறைகள் இன்டர்நெட் காலிங், மெசேஜிங் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி அமைகிறதென அடுத்துவரும் மாதங்களில்தான் தெரியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close