விரைவில் இந்தியாவில் வெளியாகிறது ஷியோமியின் கேமிங் ஸ்மார்ட்போன் #BlackShark | Xiaomi to soon bring its gaming smartphone to India

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

கடைசி தொடர்பு:06:00 (03/03/2019)

விரைவில் இந்தியாவில் வெளியாகிறது ஷியோமியின் கேமிங் ஸ்மார்ட்போன் #BlackShark

பிளே ஸ்டேஷன், xbox என்று விளையாடித் தீர்ப்பவர்கள் ஒருபுறம் இருக்க ஸ்மார்ட்போன்களிலும் அதேபோல வெறிதீர விளையாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீப காலமாகப் PUBG போன்ற பிரபல கேம்கள் மொபலை ஆக்கிரமிக்க அதை விளையாடுபவர்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட வெறித்தனமான கேமிங் ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலான மொபைல்கள் குறைவாகவே இருக்கின்றன. தற்பொழுது அந்தக் குறையைத் தீர்த்துவைக்க வருகிறது ஷியோமியின் புதிய ஸ்மார்ட்போனான பிளாக் ஷார்க். கடந்த வருடம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அங்கே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த சீரிஸில் பிளாக் ஷார்க் ஹீலோ மற்றொரு கேமிங் ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஷியோமி

சிறந்த டிஸ்ப்ளே, கிராபிக்ஸ், அதிகமாக உருவாகும் வெப்பத்தைக் குறைக்கும் அமைப்பு, பெரிய பேட்டரி போன்றவற்றுடன் கூடுதலாக இணைத்துப் பயன்படுத்தும் ஜாய் ஸ்டிக் போன்றவையும் இந்த ஸ்மார்ட்போன்களுடன்  தரப்படும். பெங்களூரில் இருக்கும் ஷியோமி இந்தியாவின் தலைமை அலுவலகத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்துவதற்காக முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக தனிக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களை ஷியோமி இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


[X] Close

[X] Close