`ஃபோல்டபிள் டிஸ்ப்ளே எப்படி இருக்குனு பாருங்க' - ஆப்பிள், கூகுளுக்கு சாம்பிள் அனுப்பிய சாம்சங் | samsung sends foldable display samples to Apple, Google

வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (04/03/2019)

கடைசி தொடர்பு:19:35 (04/03/2019)

`ஃபோல்டபிள் டிஸ்ப்ளே எப்படி இருக்குனு பாருங்க' - ஆப்பிள், கூகுளுக்கு சாம்பிள் அனுப்பிய சாம்சங்

ஃபோல்டபிள் டிஸ்ப்ளே

ஃபோல்டபிள் டிஸ்ப்ளேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை சாம்சங், ஹுவாவே போன்ற முன்னணி நிறுவனங்கள் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தன. மேலும், அதேபோல ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க மற்ற நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு சாம்சங் ஃபோல்டபிள் டிஸ்ப்ளேவின் மாதிரியை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிளைப் பொறுத்தவரையில் சாம்சங் போட்டி நிறுவனம்தான் என்றாலும் கூட இரண்டுக்கும் வியாபார ரீதியான தொடர்பு உண்டு. நீண்ட காலமாக ஐபோனுக்குத் தேவைப்படும் டிஸ்ப்ளேக்களை அங்கே இருந்து ஆப்பிள் வாங்கிப் பயன்படுத்தி வருகிறது. ஆப்பிள் புதிய ஃபோல்டபிள் உருவாகும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது. இதைத் தென் கொரியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சாம்சங்

7.2 இன்ச் அளவுள்ள மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் இருக்கும் டிஸ்ப்ளேவை விட அளவு சற்று குறைவானது எனவும் தெரிவித்துள்ளது. தற்பொழுது 2.4 மில்லியன் யூனிட்களை தயாரிக்கும் திறன் சாம்சங்கிற்கு உள்ளதாகவும் ஒரு வேளை தேவை அதிகமாகும் பட்சத்தில் 10 மில்லியன் யூனிட்கள் தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


[X] Close

[X] Close