ஹேக் செய்யப்பட்ட பி.ஜே.பி இணையதளம்... மீம் போட்டு கலாய்த்த ஹேக்கர்கள்! | BJP's website hacked today

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (05/03/2019)

கடைசி தொடர்பு:14:25 (05/03/2019)

ஹேக் செய்யப்பட்ட பி.ஜே.பி இணையதளம்... மீம் போட்டு கலாய்த்த ஹேக்கர்கள்!

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ இணையதளமான www.bjp.org திடீரென இன்று ஹேக் செய்யப்பட்டது. இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதிலிருந்த கட்சியின் விவரங்களுக்குப் பதிலாக, பிரதமர் மோடியைக் கிண்டல்செய்யும் விதமான மீம் Gif ஒன்றை அதில் இடம்பெறச்செய்தனர். சில நிமிடங்களே நடந்த இந்தச் சம்பவத்தை நெட்டிசன்கள் கவனித்து ட்விட்டரில் வெளியிடவே, அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுவருகின்றன.

முடங்கிய BJP இணையதளம்

இந்த சம்பவத்தைச் செய்தது யார், ஏதேனும் ஹேக்கர்கள் குழு இதற்குப் பின்னால் இருக்கிறதா, ஹேக்கர்கள்மூலம் கட்சியின் தகவல்கள் ஏதேனும் திருடப்பட்டதா போன்ற எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. இந்த விஷயம் வெளியே தெரியவரவே, உடனே ஹேக்கர்களின் மீம்கள் நீக்கப்பட்டு, தற்போது இணையதளம் வெறுமையாக வைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் சில பராமரிப்புப் பணிகள் தற்போது நடப்பதாகவும், விரைவில் திரும்ப வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாய்த்த மீம்

இந்த நிகழ்வை வைத்து, 'டிஜிட்டல் இந்தியாவின் பிதாமகர்களுக்கே இந்த நிலைமையா?!' எனக் கலாய்த்துவருகின்றனர் நெட்டிசன்ஸ். காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த திவ்யா ஸ்பந்தனாகூட, "இதுவரைக்கும் பி.ஜே.பி தளத்தைப் பார்க்கவில்லை எனில், நீங்கள் ஒன்றை மிஸ் செய்வீர்கள்!" என ட்வீட் செய்திருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close