சில நிமிடங்களில் இரண்டு லட்சம் ஸ்மார்ட்போன்கள் - முதல் விற்பனையிலேயே அசத்திய ரெட்மி நோட் 7 | Xiaomi sells huge number of Redmi note 7 smartphones in first sale

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (07/03/2019)

கடைசி தொடர்பு:17:10 (07/03/2019)

சில நிமிடங்களில் இரண்டு லட்சம் ஸ்மார்ட்போன்கள் - முதல் விற்பனையிலேயே அசத்திய ரெட்மி நோட் 7

ரெட்மி நோட் 7

நேற்றைக்கு முதல் முறையாக விற்பனைக்கு வந்த ஷியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7 விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 9,999 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போன் கூடுதலான வசதிகளுடன் இருந்ததால் இதற்கான எதிர்பார்ப்பும் அதிக அளவிலிருந்தது. இந்நிலையில் நேற்று ஸ்டாக் இருந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் சில நொடிகளில் விற்பனையானதாக ஷியோமி நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு குமார் ஜெயின்

ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநரான மனு குமார் ஜெயின்  இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அடுத்ததாக வரும் 13-ம் தேதி ரெட்மி நோட் 7  மற்றும் நோட் 7 புரோ ஸ்மார்ட்போன்கள் இரண்டும் விற்பனைக்கு வருகின்றன. அப்போதும் இதே போல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதைச் சமாளிக்கும் வகையில் ஷியோமியின் மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் மனு குமார் ஜெயின்  தெரிவித்துள்ளார். 


[X] Close

[X] Close