இது மார்ச் மாதத்துக்கான பரிசு - 6T ஸ்மார்ட்போனுக்கு ஸ்பெஷல் ஆஃபர்களை அறிவித்த ஒன்பிளஸ்! | oneplus announce special offer for oneplus 6T smartphone

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (07/03/2019)

கடைசி தொடர்பு:19:10 (07/03/2019)

இது மார்ச் மாதத்துக்கான பரிசு - 6T ஸ்மார்ட்போனுக்கு ஸ்பெஷல் ஆஃபர்களை அறிவித்த ஒன்பிளஸ்!

ஒன் பிளஸ் 6T

ப்ரீமியம் செக்மென்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன். கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதிகள் இருப்பதனால் பலரின் விருப்பத் தேர்வாகவும் இருந்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் நினைத்திருந்தால் அதற்கு ஏற்ற சமயம் இதுதான். மார்ச் மாதத்திற்காக மட்டும் `March Madness' என்ற ஸ்பெஷல் ஆஃபர்களை அறிவித்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன் பிளஸ் 6T

இதன் மூலம் சில சிறப்புச் சலுகைகளை 6T ஸ்மார்ட்போனை வாங்கும் போது பெற முடியும். அதன்படி ஆறு மாதத்துக்கு No cost EMI கிடைக்கிறது. மேலும் எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.2000 கூடுதலாகக் கிடைக்கும். HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் விலையில் 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி செய்யப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு வாரமும் புதிய ஆஃபர்கள் அறிமுகம் செய்யப்படும். இந்தச் சலுகை இந்த மாதம் 31-ம் தேதி வரை இருக்கும். ஒன்பிளஸ் மற்றும் அமேசான் இணையதளங்களிலும் ஒன்பிளஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்கள் ஆகியவற்றிலும் இந்த ஆஃபர்களை பெற முடியும். 


[X] Close

[X] Close