``டிம் ஆப்பிள்” - ட்ரம்ப்பின் உளறல் பேச்சால் பெயரை மாற்றிய குக் | Trump Called Tim Cook "Tim Apple" and is now breaking the internet!

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:00 (08/03/2019)

``டிம் ஆப்பிள்” - ட்ரம்ப்பின் உளறல் பேச்சால் பெயரை மாற்றிய குக்

கடந்த புதனன்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்வு ஒன்றில் அமெரிக்கர்கள் பலருக்கும் வேலை கிடைக்க உதவியதற்கு ஆப்பிள் CEO டிம் குக்கிற்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால், அது விஷயம் இல்லை. அப்படி நன்றி தெரிவிக்கையில் அவர் டிம் குக்கை டிம் ஆப்பிள் என உளறியிருக்கிறார். உடனிருந்த டிம் குக்கும் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

டிம் குக், டிரம்ப்

ஆனால், நெட்டிசன்களின் கண்களில் இருந்து இது தப்பிக்கவில்லை. இவர் டிம் ஆப்பிள் என்றால் மற்றவர்கள் பெயர் என்ன? ஜெஃப் அமேசான், பில் விண்டோஸ், மார்க் ஃபேஸ்புக் என வைத்துக்கொள்வோமா என முழுவீச்சில் ட்ரம்ப்பை கலாய்க்கும் பணியில் இறங்கினர். இது ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரல். ஆங்கில ஊடகங்களும் இதை விட்டுவைக்கவில்லை.

டிம் ஆப்பிள்

இந்த நிலையில், 'போங்கடா, இனிமே என் பெயர் டிம் ஆப்பிள் தான்டா' என்பது போல தனது ட்விட்டர் பெயரை மாற்றியிருக்கிறார் டிம் குக். இப்போது டிம் என்ற பெயருடன் ஆப்பிளின் லோகோ உடன்வருகிறது. இந்த லோகோவும் ஆப்பிள் சாதனங்களில் மட்டும்தான் தெரியுமாம். டிம் குக்கின் இந்த கலகல செயலும் இப்போது நெட்டிசன்களிடையே வைரல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close