``கூகுளில் பெண்களைவிட ஆண்களுக்கே சம்பளம் குறைவு"- வழக்கத்துக்கு மாறான ஆய்வு முடிவுகள்! | Google underpays many Men than Women

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (08/03/2019)

கடைசி தொடர்பு:12:50 (08/03/2019)

``கூகுளில் பெண்களைவிட ஆண்களுக்கே சம்பளம் குறைவு"- வழக்கத்துக்கு மாறான ஆய்வு முடிவுகள்!

இந்த வாரம் கூகுள் வழக்கத்துக்கு மாறான ஒரு விஷயத்தை அறிவித்தது. அனைவரும் பாலின பாகுபாடு இன்றி ஒரே மாதிரியான வருமானம்தான் பெறுகின்றனரா என வருடாந்திர ஆய்வு கூகுளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் சம்பள இடைவெளி இருக்கும் பெண்களைவிட ஆண்களே அதிகம் எனத் தெரியவந்துள்ளது. இது எப்போதும் எதிர்மறையாகத்தான் நடக்கும். இது குறிப்பிட்ட மென்பொருள் பொறியாளர் பணியில் அதிகமாக நடந்திருக்கிறது. இதை சரிகட்ட ஒரு 10 மில்லியன் டாலர்களை இழப்பீட்டுத் தொகையாக 10,000 ஊழியர்களுக்குப் பிரித்துவழங்க முடிவெடுத்துள்ளது.

கூகுள் சம்பளம்

``ஒரே பொறுப்பில், ஒரு இடத்தில், ஒரே அளவிலான வேலைபார்த்தும் மற்றவர்களைவிடக் குறைவான சம்பளம் வாங்கியவர்களுக்குக் குறிப்பிடப்பட்ட தொகை சென்றுசேரும். ஆனால், இது நிரந்தரத் தீர்வாக இருக்காது என்பதை நாங்கள் அறிவோம்" என்றார் லாரன் பார்படோ. இவர்தான் இந்தச் சம்பள விவகாரங்களைக் கண்காணிக்கும் கூகுளின் தலைமை ஆய்வாளர், ``செயல்திறன், பதவிஉயர்வு மற்றும் பிற மதிப்பீடுகளால் இந்தச் சம்பள இடைவெளி ஏற்பட்டிருக்கலாம். இதைத் தீர்க்க சரியான திட்டங்களை வகுத்து வருகிறோம்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது மட்டுமல்லாமல் வேலை இட பாதுகாப்பு தொடங்கி சில மாதங்களாகவே ஊழியர்களின் விமர்சனங்களைப் பெற்று வருகிறது கூகுள். ஊழியர் போராட்டங்களும் வெடித்தன. அதே நேரத்தில் இந்தச் சம்பள இடைவெளி என்பது பெண்களுக்கும் இருக்கவே செய்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்க `உலகில் வேலை செய்யச் சிறந்த இடமாகக் கூகுளை மாற்றுவோம். அதற்காகவே முடிந்தளவு முயற்சி செய்து வருகிறோம். பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம்' என தங்கள் பிளாகில் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close