``இனி திருநெல்வேலி மண்ணில் இருந்தும் டெக் தொழில்முனைவோர்கள்" - நெல்லையில் `ஹேக்கத்தான்’ | Hackathon event in Tirunelveli

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (09/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (09/03/2019)

``இனி திருநெல்வேலி மண்ணில் இருந்தும் டெக் தொழில்முனைவோர்கள்" - நெல்லையில் `ஹேக்கத்தான்’

சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் ஹேக்கத்தான் நிகழ்ச்சிகள் கல்லூரிகள் சார்பிலும், ஐடி நிறுவனங்கள் சார்பிலும் நடப்பது வழக்கம். பொதுமக்களின் அன்றாட பிரச்னையை தீர்க்க எளியத் தீர்வுகள் காணக் குழுக்களாக போட்டியிடுவர். இதில் கொடுக்கப்படும் தொழில்நுட்ப தீர்வுகள் பயனாளரின் வரவேற்பையும், தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துகளையும் கொண்டு சிறந்த டீம்கள் எது என்று தீர்மானிக்கப்படும். அவர்களுக்கு அது தொடர்பான தொழில் தொடங்க வாய்ப்பும், முதலீடும் கிடைக்கும். இப்படியான ஹேக்கத்தான் நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு (மார்ச் 9, 10) நடைபெறவுள்ளது.

ஹேக்கத்தான்

FX பொறியியல் கல்லூரியில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை #TirunelveliStartup என்னும் டெக் தொழில் முன்னவோர்களால் தொடங்கப்பட்ட தன்னார்வ குழு நடத்தவுள்ளது. Zoho போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆதரவுடன் இது நடக்கவுள்ளது. டெக் தொழில் முனைவில் தமிழகத்தின் வட மாவட்டங்களை விட பின்தங்கியிருப்பதை உணர்ந்து அந்த நிலை மாறவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவாம். இதன்மூலம் சமூகத்திற்கு பயன்படும் தொழில்நுட்ப தீர்வுகள் திருநெல்வேலி மண்ணிலிருந்தும் இனி வரும் என நம்பிக்கை தெரிவிக்கிறது இந்த #TirunelveliStartup தன்னார்வ குழு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close