`ஸ்மார்ட்போனில் அல்ல; கேமராவில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள்'.. விளம்பரத்தில் சொதப்பிய ஹுவாவே | Huawei use DSLR camera photos for smartphone Advertising

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:06:00 (12/03/2019)

`ஸ்மார்ட்போனில் அல்ல; கேமராவில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள்'.. விளம்பரத்தில் சொதப்பிய ஹுவாவே

ஹுவாவே

இந்த மாதத்தின் கடைசியில் P30 Pro என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது முன்னணி மொபைல் நிறுவனமான ஹுவாவே. அதற்காக P30 Pro போனில் எடுக்கப்பட்டவை என்பதைப் போலச் சித்திரிக்கப்பட்ட பல போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்து வருகிறது. அந்த போட்டோக்கள், இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அதிக அளவு Zoom செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. சமீபகாலமாக அதைப் போலத் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த போட்டோக்களால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ப்ரோ

இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்துவதற்காக ஹுவாவே நிறுவனம் பயன்படுத்திய போட்டோக்கள் இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்டவை இல்லை என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் பல வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. மேலும், இவை அனைத்தும் காப்புரிமை பெற்றவை என்பதால், பணம் கொடுத்து இவற்றை வாங்கிப் பயன்படுத்தியிருக்கக் கூடும். ஆனால், அதைப் பற்றிய தகவல் எதையும் ஹுவாவே நிறுவனம் அந்த போட்டோக்களில் குறிப்பிடவில்லை. 


[X] Close

[X] Close