`ரியல்மீயா, ரெட்மியா.. பேட்டரியா, கேமராவா?' - ஸ்மார்ட்போன்களில் இந்தியர்கள் எதை விரும்புகிறார்கள் ? | Mobile survey reveals indian customers mostly likes in smartphones

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:19:00 (12/03/2019)

`ரியல்மீயா, ரெட்மியா.. பேட்டரியா, கேமராவா?' - ஸ்மார்ட்போன்களில் இந்தியர்கள் எதை விரும்புகிறார்கள் ?

ஸ்மார்ட்போன்

ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும்போது அதில் இந்தியர்கள் எந்த வசதியை எதிர்பார்க்கிறார்கள் என்ற தகவல்களை வெளியிட்டிருக்கிறது ஒரு ஆய்வு நிறுவனம். CMR என்ற நிறுவனம் இந்தியா முழுவதிலும் உள்ள எட்டு நகரங்களில் 15 முதல் 30 வயது உள்ளவர்களிடம் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. அதன்படி ஸ்மார்ட்போனில் கேமரா குவாலிட்டியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக 89% பேர் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக 87% பேர் பேட்டரியின் திறன் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும், ரேம் அதிகமாக இருக்க வேண்டும் என 79% பேரும்,  இன்டெர்னல் மெமரி அதிகமாக இருக்க வேண்டும் என 72% பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

CMR

ஷியோமி நிறுவனம் விற்பனையில் முதலிடத்தில் இருப்பதாக வேறு சில ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும், இந்த ஆய்வின் முடிவு வேறு விதமாக இருக்கிறது. இந்த ஆய்வில் தரம், மதிப்பு, சர்வீஸ் எனப் பல வகைகளில் முதலிடம் பிடித்திருப்பது ரியல்மீ நிறுவனம்தான். இரண்டாவது இடத்தில் ரெட்மி இருக்கிறது. தரம் மற்றும் கொடுக்கும் பணத்துக்கு மதிப்பு அதிகமாக இருப்பதுதான் ரியல்மீ முதலிடம் பிடித்திருப்பதற்கான காரணமாக இருக்கிறது.


[X] Close

[X] Close