₹ 4,499 பட்ஜெட்; ஆண்ட்ராய்டு மினி வெர்ஷன்... தரை லெவலுக்கு இறங்கிய ஜியோமி! | Xiaomi launches Redmi Go smartphone in india

வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (21/03/2019)

கடைசி தொடர்பு:10:41 (21/03/2019)

₹ 4,499 பட்ஜெட்; ஆண்ட்ராய்டு மினி வெர்ஷன்... தரை லெவலுக்கு இறங்கிய ஜியோமி!

இந்த ஸ்மார்ட்போன் மூலமாக ஷியோமியின் விற்பனை அதிகரிக்கும். ஆனால் மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு இது நிச்சயமாக நல்ல செய்தி கிடையாது

₹ 4,499 பட்ஜெட்; ஆண்ட்ராய்டு மினி வெர்ஷன்... தரை லெவலுக்கு இறங்கிய ஜியோமி!

பட்ஜெட் செக்மென்டில் கொஞ்சம் மேலேயே இருந்த ஜியோமி, இந்த முறை தரை லெவலுக்கு இறங்கியிருக்கிறது. முதல் முறையாக 5,000 ரூபாய்க்குக் கீழ் 4499 ரூபாய்க்கு ரெட்மி கோ ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோமி. பட்ஜெட் செக்மென்டில் கடும் போட்டியை இந்த ஸ்மார்ட்போன் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதனால் சில உள்நாட்டு மொபைல் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். 

ஆண்ட்ராய்டின் மினி வெர்ஷன் கோ

ஷியோமி

என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரேம் குறைவாகக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்காக கூகுள் வடிவமைக்கும் ஆண்ட்ராய்டின் மினி வெர்ஷன்தான் ஆண்ட்ராய்டு கோ. இந்த இயங்குதளத்தின் அளவு குறைவு என்பதால், குறைந்த ரேம் என்றாலும் சிறப்பாக இயங்கும். அதற்கேற்ப இதில் உள்ள ஆப்களின் அளவும் குறைக்கப்பட்டிருக்கிறது. அளவுதான் மாறுபடுகிறதே தவிர முழுமையான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் என்னென்ன வசதிகள் கிடைக்குமோ, அதை எந்தக் குறையும் இன்றி இதிலும் பெற முடியும். இந்த இயங்குதளத்தில், இந்தியாவில் வெளியாகும் ஜியோமியின் முதல் ஸ்மார்ட்போன் ரெட்மி கோ. இந்த ஸ்மார்ட்போனில், 5 இன்ச் HD டிஸ்ப்ளே இருக்கிறது. விலை குறைவாக இருந்தாலும்,டிஸைனில் அசத்துவதுதான் ஜியோமியின் ஸ்டைல். இந்த ஸ்மார்ட்போனிலும் ஒரு பிரீமியம் லுக்கைக் கொண்டுவர முயற்சிசெய்திருக்கிறது. பின்புறமாக 8MP கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறமாக 5MP கேமரா இருக்கிறது. இதில் AI வசதி இருப்பதால், சில ஃபில்டர்கள் கூடுதலாகக் கிடைக்கும். 1GB ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில்,        8 GB இன்டர்னல் மெமரி இருக்கிறது. மேலும், இதை 128GB வரை நீட்டித்துக்கொள்ளவும் முடியும்.

மொபைல்

அதற்கேற்ற வகையில், ஒரே நேரத்தில் இரண்டு சிம் மற்றும் மெமரி கார்டைப் பயன்படுத்தும் வகையில் இரண்டு ஸ்லாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. குவாட்கோர் திறன் கொண்ட Snapdragon 425 புராஸசர் இதில் இருக்கிறது. 3000 mAh பேட்டரி இதில் இருக்கிறது. இதன் மூலமாக 10 நாள்கள் வரை ஸ்டாண்ட்பை டைம் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது ஜியோமி. சமீபத்தில், ஜியோமி ஸ்மார்ட் போன்களில் இருக்கும் MIUI-யில் விளம்பரங்கள் காட்டப்படுவதை யாருமே விரும்புவது கிடையாது. ஆனால், இதில் அந்தக் கவலையில்லை. ஆண்ட்ராய்டு கோ  இயங்குதளத்தில்  எந்த விளம்பரங்களும் தோன்றாது. கறுப்பு மற்றும் நீலம் என இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. 

இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு சிக்கல்

ரெட்மி

ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை பட்ஜெட் செக்மென்ட்தான் மொபைல் நிறுவனங்களுக்குப் போட்டி அதிகமாக இருக்கும் இடம். இதில் மொபைல்களின் விலை 3,000 ரூபாயில் இருந்தே தொடங்குகிறது. ஜியோமி நிறுவனம் இப்போதுதான்  இந்தப் பக்கம் முதல் முறையாகக் கால் வைக்கிறது. மைக்ரோமேக்ஸ், இண்டெக்ஸ், செல்கான் என பல நிறுவனங்களிடம் இருந்த ஒரே சந்தை வாய்ப்பு. இந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்கள்தான். ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்த விற்பனை முழுவதும் ஜியோமி, சாம்சங் எனப் பெரிய நிறுவனங்களின் கைகளுக்கு எப்போதோ சென்றுவிட்டது. எனவே, இந்திய மொபைல் நிறுவனங்கள் நம்பியிருந்தது ஆஃப்லைன் ஸ்டோர்களைத்தான். அங்கும் அதிகமாக விற்பனையாவது  என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்கள்தான். மொபைலுக்கென பெரிய அளவில் செலவுசெய்ய விரும்பாதவர்கள் தேர்ந்தெடுக்கும் இவைதான், சிறிய மொபைல் நிறுவனங்களுக்கான கடைசி நம்பிக்கையாக இருந்தது. இப்போது, ரெட்மி கோ மூலமாகப் போட்டி நிறுவனங்கள் குறிப்பாக இந்திய மொபைல் நிறுவனங்களிடம் இருந்த இறுதி நம்பிக்கையையும் தட்டிப் பறித்திருக்கிறது ஜியோமி. எந்த வகையில் பார்த்தாலும் இந்த விலையில் கிடைக்கும் மொபைல்களுடன் ஒப்பிடும்போது ரெட்மி கோ-வின் தரமும், வசதியும் அதிகமாகவே இருக்கப்போகிறது. எனவே, இதற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கும். அதன் காரணமாக மொபைல் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விற்பனை எண்ணிக்கை வெகுவாகக் குறையும் வாய்ப்புகள் அதிகம். 


டிரெண்டிங் @ விகடன்