தகவல்களை சீனாவுக்கு அனுப்பிய நோக்கியா மொபைல்... விசாரிக்கும் பின்லாந்து! | Nokia 7 plus smartphone send user data to china servers

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:18:00 (22/03/2019)

தகவல்களை சீனாவுக்கு அனுப்பிய நோக்கியா மொபைல்... விசாரிக்கும் பின்லாந்து!

HMD நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 7 ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போன் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறது. சில நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கண்காணித்த போது அவை தகவல்களைச் சீனாவில் இருக்கும் சர்வருக்கு அனுப்பப்படுவதைக் கண்டறிந்ததாக இணையதளம் ஒன்று கடந்த மாதம் தகவல் வெளியிட்டிருந்தது.

 நோக்கியா 7 பிளஸ்

IMEI எண்கள், ஸ்மார்ட்போனின் MAC முகவரி, மற்றும் இருப்பிடம் எனப் பல்வேறு வகையான டேட்டாக்கள் அதில் அடக்கம். ஐரோப்பிய யூனியனில் அமலில் இருக்கும் GDPR சட்டம் இது போன்ற செயல்களை அனுமதிப்பதில்லை.

நோக்கியா

எனவே, பின்லாந்தின் தகவல் பாதுகாப்பு அமைப்பு இது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்தது. ``முதல் கட்ட ஆய்வில் சில தனிப்பட்ட தகவல்களும் கூட சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார் தகவல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ரெய்ஜோ ஆர்னியோ (Reijo Aarnio). இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் HMD குளோபல் நிறுவனம். மென்பொருளில் உள்ள ஒரு பிழையால் தகவல்கள் தவறுதலாக சீனாவில் இருக்கும் சர்வருக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் கடந்த மாதம் அந்தப் பிழை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.