ஒரு நாளைக்கு இனி 6 மணி நேரம்தான் பப்ஜி... இந்தியாவில் புது ரூல்ஸ்? | Now you can play pubg only for 6 hours in a day in India

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (23/03/2019)

கடைசி தொடர்பு:12:40 (23/03/2019)

ஒரு நாளைக்கு இனி 6 மணி நேரம்தான் பப்ஜி... இந்தியாவில் புது ரூல்ஸ்?

சமீபகாலத்தில் இந்தியாவின் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது பப்ஜி. சில இடங்களில் இதற்குத் தடைவிதிக்கும் அளவுக்குப் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது இது. பப்ஜி ஆட புதிய போன் வாங்கித்தராததால் தற்கொலை, பப்ஜியில் மூழ்கிப் போய் ரயில் வருவதைக்கூட பார்க்காமல் உயிரை இழந்த இரண்டு இளைஞர்கள் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் செய்திகளாக பப்ஜியைச் சுற்றிவெளிவந்தன. `பப்ஜி’ இளைஞர்களை அடிமையாக்கி வருகிறது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

பப்ஜியின் புதிய கட்டுப்பாடு

பொது இடங்களில் பப்ஜி ஆடியவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யும் நிகழ்வுகளும் குஜராத் போன்ற மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளை அடுத்து `பப்ஜி' தரப்பில் ஒரு புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆறு மணிநேரங்களுக்குமேல் இனி பப்ஜி ஆடமுடியாது என்பதே அந்தக் கட்டுப்பாடு. இது இந்தியாவில் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இப்போது தொடர்ந்து இரண்டு மணிநேரங்கள் ஆடினால் முதல் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. 6 மணி நேரங்கள் ஆகிவிட்டால் `Health Reminder' என்று ஒன்று தோன்றி நாளைதான் உங்களால் மீண்டும் ஆடமுடியும் என்று கூறுகிறது. பப்ஜி ரசிகர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பலரும் இதை வரவேற்றுள்ளனர். அரசின் அழுத்தத்தில்தான் இதைச் செய்தனரா, இல்லை தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க