டார்க் மோடு, பயோமெட்ரிக் லாக்... வாட்ஸ்அப் புது அப்டேட்ஸ்! | WhatsApp testing its new biometric lock and dark mode feature in beta

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (30/03/2019)

கடைசி தொடர்பு:18:23 (30/03/2019)

டார்க் மோடு, பயோமெட்ரிக் லாக்... வாட்ஸ்அப் புது அப்டேட்ஸ்!

டார்க் மோடு மற்றும் பயோமெட்ரிக் லாக் ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் வாட்ஸ்அப்புக்கு வருவதாக நீண்டநாளாகவே செய்திகள் வந்துகொண்டிருந்தன. தற்போது இவை இரண்டையும் தன்னுடைய பீட்டா வெர்ஷனில் சோதனை செய்துவருகிறது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப் டார்க் மோடு

Photo: WABetaInfo

டார்க்மோடு ஆப்ஷனை 2.19.47 வெர்ஷனிலிருந்து வாட்ஸ்அப் சோதனை செய்துவருவதாக WABetaInfo தளம் தெரிவித்திருக்கிறது. டார்க் கிரே நிறத்தில் இந்த டார்க் மோடை வடிவமைத்திருக்கும் வாட்ஸ்அப் விரைவில் அப்டேட்டை அனைவருக்கும் வெளியிடவிருக்கிறது. இதேபோல ஆண்ட்ராய்டு வெர்ஷனில் அறிமுகம் செய்யவிருக்கும் இன்னொரு வசதி பயோமெட்ரிக் லாக்.

Whatsapp biometric lock

Photo: WABetaInfo

கடந்த பிப்ரவரி மாதம் இதை ஐ.ஓ.எஸ் வெர்ஷனுக்கு கொண்டுவந்தது அந்நிறுவனம். தற்போது 2.19.83 வெர்ஷனில் ஆண்ட்ராய்டிற்கும் சோதனை செய்துவருகிறது. இதன்மூலம் தனிப்பட்ட ஆப் லாக் இல்லாமல், வாட்ஸ்அப்பின் செட்டிங்க்ஸ் பகுதிக்குச் சென்று பிரத்யேக பயோமெட்ரிக் லாக் செய்துகொள்ள முடியும். இதில் ஒரு நிமிடம், 10 நிமிடம், 30 நிமிடம் என நம்முடைய நேரத்திற்கேற்ப வாட்ஸ்அப் லாக் செட்செய்துகொள்ளலாம். விரைவில் 2.19.3 வெர்ஷனிலிருந்து அனைத்து பயனாளர்களுக்கும் இதை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.