10 இன்ச் டிஸ்ப்ளே; டால்பி ஸ்பீக்கர்கள்... - அமேசானின் புதிய எக்கோ ஷோ! | Amazon launched its new gadget called amazon echo show

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (03/04/2019)

கடைசி தொடர்பு:23:00 (03/04/2019)

10 இன்ச் டிஸ்ப்ளே; டால்பி ஸ்பீக்கர்கள்... - அமேசானின் புதிய எக்கோ ஷோ!

ந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்து வரும் அமேசான் நிறுவனம் தற்போது `அமேசான் எக்கோ ஷோ' என்னும் ஸ்மார்ட் கேட்ஜெட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன் விலை ரூ.22,999 ஆகும்.

அமேசான் எக்கோ ஷோ

அமேசான் எக்கோ ஷோவில் ஆடியோ மற்றும் வீடியோவைப் பார்த்து ரசிக்கும்வகையில் 10 இன்ச் HD ஸ்கிரீன், வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 5 மெகா பிக்ஸல் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுதவிர நாம் கொடுக்கும் கட்டளைகளைத் துல்லியமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் 8 மைக்ரோ போன்கள் கொண்ட அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice assistant), புளூடூத் (BT), வைஃபை (Wifi) போன்ற தொழில்நுட்ப வசதிகளும் அடங்கியுள்ளன.

Amazon echo show

எக்கோ ஷோ மூலம் கேப் புக் செய்வது, வீட்டில் பயன்படுத்தும் பாதுகாப்பு கேமராக்களை (cctv) இணைத்துப் பயன்படுத்திக் கொள்வது, தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் படங்களைப் பார்ப்பது எனத் தொடங்கி ஃபேஸ்புக், பிரைம் மியூசிக், ஜியோ சாவன் மற்றும் இணையதள தேடல் முதலான அனைத்துச் சேவைகளையும் இந்த அமேசான் எக்கோ ஷோவில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி பயன்படுத்திக்கொள்ள முடியும். இதை வாங்குபவர்களுக்கு பிலிப்ஸ் ஹூ ஸ்மார்ட் லைட் பல்பும் இலவசமாகக் கிடைக்கிறது.