'இனி அனுமதியில்லாமல் குரூப்களில் சேர்க்க முடியாது!'- வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம் | WhatsApp launches a Group Invitation feature for Android

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (04/04/2019)

கடைசி தொடர்பு:18:01 (04/04/2019)

'இனி அனுமதியில்லாமல் குரூப்களில் சேர்க்க முடியாது!'- வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம்

 வாட்ஸ்அப்

விருப்பமில்லாத வாட்ஸ்அப் குரூப்களில் ஒருவர் இணைக்கப்படுவதைத் தடுக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. அதன்படி, யார் ஒருவர் வாட்ஸ்அப் குரூப்களில் இணைக்கலாம் என்பதை முன் கூட்டியே தேர்வுசெய்துகொள்ள முடியும். இந்த வசதியைப் பயன்படுத்த, அக்கவுண்ட் >பிரைவசி >குரூப் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று (Nobody, My Contacts or Everyone) ஆப்ஷனில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம். Nobody என்கிற ஆப்ஷனைth தேர்வுசெய்தால், குழுவில் இணைக்கப்படும் நபருக்கு இன்வைட் மெசேஜ் வரும். அந்த மெசேஜைப் பார்த்து, விருப்பமிருந்தால் இணைந்துகொள்ளலாம் இல்லையெனில் தவிர்த்துவிடலாம்.

குரூப்

அந்த இன்வைட் மெசேஜ், மூன்று நாள்களில் காலாவதி ஆகிவிடும். My contacts என்கிற ஆப்ஷனைth தேர்வுசெய்தால் மொபைலில் எண்ணைப் பதிவுசெய்து (contacts) வைத்திருக்கும் நபர்கள் மட்டும் அனுமதி இன்றி குரூப்களில் இணைக்க இயலும். Everyone என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், யார் வேண்டுமானாலும் குரூப்களில் இணைக்க முடியும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் செயலிக்கு இப்போது இந்த வசதி கொடுக்கப்பட்டுவருகிறது. ஒரு சிலருக்கு மட்டும்  கொடுக்கப்பட்டுள்ள இந்த வசதி, இன்னும் சில நாள்களில் அனைவருக்கும் கிடைக்கும் என அந் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.