ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் பேட்டரி பேக்அப்... அறிமுகமானது புதிய பவர் பீட்ஸ் புரோ | Beats Electronics launches new wireless earphones Beats Powerbeats Pro

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (05/04/2019)

கடைசி தொடர்பு:20:45 (05/04/2019)

ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் பேட்டரி பேக்அப்... அறிமுகமானது புதிய பவர் பீட்ஸ் புரோ

பீட்ஸ்

ஆப்பிளின் துணை நிறுவனமான பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் 'பவர் பீட்ஸ் புரோ' என்ற புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏர் பாட்ஸ்  2 என்ற இயர்போன்களை ஆப்பிள் சில நாள்களுக்கு முன்னால்தான் அறிமுகம் செய்திருந்தது.  இந்த முழுமையான வயர்லெஸ் வசதி, சிறந்த சவுண்ட் குவாலிட்டி ,ப்ளூடூத் கனெக்டிவிட்டி வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மற்றும் ஹெச் 1 ஆடியோ சிப் வசதியைக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் தயாரிப்பில் ஐபோன்களில் இருப்பதைப் போன்று 'சிரி' வாய்ஸ் அசிஸ்டென்ட்  வசதியும் இடம்பெற்றுள்ளது.

ஆப்பிள்

வேகமாக சார்ஜ் செய்யும் வசதியைக் கொண்டுள்ள இந்த பவர் பீட்ஸ் இயர்போன்களை ஐந்து நிமிடத்தில் சார்ஜ் செய்து, ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதன் விலை $ 249.95 அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில் 17,000-க்கு சமம். ஒவ்வொரு இயர் பட்சிலும் தனித்தனியாக வால்யூம் கன்ட்ரோல் அமைந்திருப்பதால், நமது விருப்பத்திற்கு ஏற்ப வால்யூமை அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். இதன் பேட்டரி, சுமார் 9 மணி நேரம் வரை  நீடிக்கக்கூடியது.