`சாதாரண ஸ்பீக்கரைக்கூட ஸ்மார்ட்டாக மாற்றும்!' - அமேசான் அறிமுகப்படுத்திய இரண்டு புதிய கேட்ஜெட்கள் | Amazon launches Echo Link and Echo Link Amp in india

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:03 (12/04/2019)

`சாதாரண ஸ்பீக்கரைக்கூட ஸ்மார்ட்டாக மாற்றும்!' - அமேசான் அறிமுகப்படுத்திய இரண்டு புதிய கேட்ஜெட்கள்

அமேசான்

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் தற்போது `அமேசான் எக்கோ லிங்க் (Echo Link) மற்றும் எக்கோ லிங்க் ஆம்ப்' (Echo Link Amp) என்னும் இரண்டு ஸ்மார்ட் கேட்ஜெட்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஸ்பீக்கர், ரிசீவர் மற்றும் ஆம்ளிபையர் என அனைத்து வகை ஆடியோ சாதனங்களுடனும் இதை இணைத்துக் கொள்ளலாம். அதன் மூலமாக அனைவருக்கும் ஏற்ற வகையில் இசையை ஸ்ட்ரீம் செய்து கொள்ள முடியும். இதன் மூலமாக அமேசான் பிரைம் மியூசிக் உட்பட பலஆடியோ ஸ்ட்ரீம் சேவைகளிலிருந்து பாடல்களைக் கேட்கலாம்.

Echo Link

எக்கோ லிங்க் ஆம்ப்பில் எக்கோ லிங்கிலுள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், இதில் ரிசீவர் இல்லாமல் நேரடியாக ஸ்பீக்கர்களை இணைத்துப் பயன்படுத்த முடியும். அமேசானின் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் சேவையான அலெக்ஸாவையும் இதன் மூலமாக பயனாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். அமேசான் எக்கோ லிங்க்கின் விலை ரூ.19,999 மற்றும்  எக்கோ லிங்க் ஆம்ப் விலை ரூ. 29,999 என அமேசான் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.,