மெசெஞ்சர் ஆப் தொல்லையில் இருந்து விடுதலை... மீண்டும் ஃபேஸ்புக் ஆப் உடன் இணைக்கத் திட்டம் | Facebook Messenger return to facebook app soon

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (12/04/2019)

கடைசி தொடர்பு:20:19 (12/04/2019)

மெசெஞ்சர் ஆப் தொல்லையில் இருந்து விடுதலை... மீண்டும் ஃபேஸ்புக் ஆப் உடன் இணைக்கத் திட்டம்

ஃபேஸ்புக்

ஆண்ட்ராய்டு, ஐபோன் என எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் ஃபேஸ்புக் மெசெஞ்சரைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்காகத் தனியாக ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யவேண்டியிருக்கும். தொடக்கத்தில், ஃபேஸ்புக்கின் மொபைல் ஆப்பின் உள்ளேயே மெசெஞ்சர் செயல்பட்டுவந்தது. அதன்பிறகு, 2011-ம் ஆண்டில் மெசெஞ்சருக்கென தனியாக ஆப் ஒன்றை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டில் ஃபேஸ்புக் ஆப்பின் உள்ளே மெசெஞ்சரை அணுகுவதை முழுவதுமாகத் தடை செய்தது. இதன் மூலமாக, மொபைல் மெமரியில் அதிக இடம் வீணாவது, அடிக்கடி ஆப் கிராஷ் ஆவது எனப் பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்துவந்தன. தற்போது, ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மெசெஞ்சர் ஃபேஸ்புக் ஆப் உடன் இணைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மெசெஞ்சர் ஆப்

Photo Credit:@wongmjane / Twiter

இந்தத் தகவலை Jane Manchun Wong என்பவர் வெளியிட்டுள்ளார். மேலும், இப்போதைக்கு அதில் வெறும் டெக்ஸ்ட் சாட் மட்டுமே  செய்ய முடியும் எனவும், வேறு பல கூடுதல் வசதிகள் வேண்டுமென்றால் மெசெஞ்சர் ஆப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும்  தெரிவித்திருக்கிறார். தற்போது, பயனாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் மெசேஜ் சேவை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பணியில் ஃபேஸ்புக் ஈடுபட்டிருக்கிறது. அதன் விளைவாகவே மீண்டும் மெசெஞ்சரை பேஸ்புக் ஆப்பின் உள்ளே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.