வருடத்துக்கு 157 கோடி ரூபாய்! - ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் பாதுகாப்புச் செலவு உயரக் காரணம் என்ன? | Facebook spends on Mark's security Quadrapled in the last 4 years

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (16/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (16/04/2019)

வருடத்துக்கு 157 கோடி ரூபாய்! - ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் பாதுகாப்புச் செலவு உயரக் காரணம் என்ன?

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு செலவழிக்கும் தொகை, கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்துள்ளதாக, அமெரிக்க அரசிடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்கும்போது தெரிவித்துள்ளது . 2018-ல் அவரின் பாதுகாப்புக்காக மட்டும் 22.6 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறதாம். 2016-ல், சுமார் 5 மில்லியன் டாலர்களே இதற்கு செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் சக்கர்பெர்க்

இந்த பாதுகாப்புத் திட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு வருடமும் மார்க் சக்கர்பெர்க்கிற்கு இருக்கும் அச்சுறுத்தல் கூடிக்கொண்டே இருக்கிறதெனத் தெரிவிக்கின்றனர். "அனைவருமே பார்த்தால் அடையாளம் காணும் அளவிற்கு மார்க் பிரபலமாக உள்ளார். மேலும்,  அவரையும் ஃபேஸ்புக்கையும் யாரும் பிரித்துப்பார்ப்பதில்லை. நிறுவனத்தின் மேல் இருக்கும் அதிருப்தியையும் கோபத்தையும் அவர்மீது காட்ட வாய்ப்புகள் அதிகம்" என்றனர்.

பிரைவேட் ஜெட்

சமீபத்தில், பயனாளர் டேட்டா லீக் ஆனது தொடங்கி, பல சர்ச்சைகளில்  ஃபேஸ்புக் சிக்கியிருக்கிறது. இதுதான் மார்க்கின் அச்சுறுத்தல்களுக்கு, பிரச்னைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தனி பிரைவேட் ஜெட்களில்தான் பயணிக்கிறார் அவர். அதிகம் பயணிப்பதால், 2.6 மில்லியன் டாலர்கள்வரை அதிலேயே செலவழிக்கப்படுகிறது.

"இந்தச் செலவு நியாயமானதுதான் என்று நிர்வாக உறுப்பினர்கள் நினைக்கிறோம். மார்க், வருடம்  முழுவதும் 1 டாலர் சம்பளம்தான் பெறுகிறார். எந்த போனஸும்,  மானியங்களும் அவர் பெறுவதில்லை. அதனால், இந்தச் செலவு சரியானதுதான்" என்கிறது ஃபேஸ்புக் நிர்வாகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க