'இனி ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது!' - சர்ச்சையைக் கிளப்பும் வாட்ஸ்அப்பின் புதுவசதி | New feature enables WhatsApp to not take screenshots of chats

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (17/04/2019)

'இனி ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது!' - சர்ச்சையைக் கிளப்பும் வாட்ஸ்அப்பின் புதுவசதி

நம்மில் பலரும் இன்று எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்துவதே இல்லை. இதற்கு முக்கியக் காரணம், வாட்ஸ்அப்தான். இன்று மெசேஜ், போட்டோ, வீடியோ என எது பகிரவேண்டுமானாலும் வாட்ஸ்அப்.  புதிய வசதிகளை அவ்வப்பொது சேர்த்துக்கொண்டே இருப்பது வாட்ஸ்அப்பின் வழக்கம். இதில், பல மக்களால் வரவேற்கப்பட்டாலும் சில, அவர்களுக்குப் பிடிக்காமலும் போகும். அப்படி ஒரு வசதியைத்தான் தற்போது அறிமுகப்படுத்தும் வேலையில் இருக்கிறது வாட்ஸ்அப். இந்த வசதியை ஆன் செய்துவைத்துக்கொண்டால், உங்கள் வாட்ஸ்அப் ஆப்பில் யாராலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கமுடியாதாம்.

வாட்ஸ்அப்

2.19.106 பீட்டா வெர்ஷனில் இந்தப் புதிய வசதியைப் பார்த்திருக்கின்றனர் சில பயனாளர்கள். நாம் பெரும்பாலும் ஒருவருடனான சாட்டை மற்றவர்களுக்கு அனுப்ப, ஸ்க்ரீன்ஷாட் வசதியையே பயன்படுத்துகிறோம். ஆனால், இது சில நேரங்களில் அந்த சாட்டில் ஈடுபட்ட இன்னொரு நபரின் பிரைவசியைப் பாதிக்கும். ஆனால், இந்தப் புதிய வசதியின்மூலம் அதற்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, உங்கள் மொபைலில் வேறு எவரும் வாட்ஸ்அப் சாட்டுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பார்த்துக்கொள்ளும் இது. நீங்கள், இதை ஆன் செய்திருந்தாலும் சாட் செய்யும் மற்றவரால் அந்த சாட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கமுடியும். அப்புறம் எதற்கு இதைக் கொண்டுவர வேண்டும் என்றே பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட்

ஏற்கெனவே, ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக்கை வாட்ஸ்அப்பில் கொண்டுவர வாட்ஸ்அப் முயற்சி செய்துவருகிறது. அப்படி இருக்கும்போது, இது தேவையில்லாத ஆணிதான் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. இந்த விமர்சனங்களைக் கடந்து, இந்தப் புதிய வசதி வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க