`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்!' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி | Reviewers lashes out as Samsung galaxy fold review models breaks

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (20/04/2019)

கடைசி தொடர்பு:15:40 (20/04/2019)

`மடக்குனா உடையும்னா, எல்லாமே ஃபோல்டபிள் போன்தான்!' - சாம்சங் குறித்து விமர்சகர்கள் அதிருப்தி

சில வாரங்களுக்கு முன்பு டிஸ்ப்ளேவை இரண்டாக மடக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்றை சாம்சங் அறிமுகப்படுத்தியிருந்தது. பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது இந்த 'சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்' அறிமுகம். இரண்டு சிறிய ஸ்மார்ட் போன்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தது போலத் தோற்றமளிக்கும் இந்த கேலக்ஸி ஃபோல்டு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இந்த போன்களை உலகமெங்கும் இருக்கும் முன்னணி கேட்ஜெட் விமர்சகர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பிவைத்தது சாம்சங். அப்படி அனுப்பிவைக்கப்பட்ட போன்களால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது சாம்சங்.

சாம்சங் ஃபோல்ட்

Image source: Marques Brownlee

ஒரு நாளைக்கு 100 தடவைக்கு மேல் இதை மடக்க வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதன் மடக்கும் வடிவமைப்பு உருவாக்கியிருப்பதால் பிரச்னை எதுவும் இருக்காது எனத் தெரிவித்தது சாம்சங். ஆனால், சிலருக்கு சில நாள் பயன்பாட்டிலேயே உடைந்திருக்கிறது இந்த டிஸ்ப்ளே. மார்கியேஸ் பிரவுன்லி, மார்க் குர்மன் போன்ற முன்னணி விமர்சகர்களுக்கும் இது நடந்துள்ளது. உடையவில்லை என்றாலும் பலருக்கு டிஸ்ப்ளேயில் கோளாறு இருந்திருக்கிறது. இதனால் இந்த ஃபோல்ட் போன் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் கேட்ஜெட் விமர்சகர்கள்.

சாம்சங் தரப்பில், ``நாங்கள் இந்தப் புகார்களை தீவிரமாக விசாரிக்கவுள்ளோம். பலரும் டிஸ்ப்ளேயின் மேற்புறத்தில் இருக்கும் பாதுகாப்பு லேயரை எடுத்துள்ளனர். இதுவே டிஸ்ப்ளே சேதமானதற்கு காரணமாக இருக்க வேண்டும். இதைப் பற்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான அறிவுரைகளை வழங்குவோம்" என்று தெரிவிக்கப்பட்டது. 

விமர்சகர் ட்வீட்

ஆனாலும் 1,980 டாலர்கள் (1.4 லட்சம் ரூபாய்) கொடுத்து இப்படி ஒரு போனை வாங்க வேண்டுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்கள் கூறும் பாதுகாப்பு லேயரை மிகவும் எளிதாக வெளியே வரும்படி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சாம்சங்கின் புது வெளியீடுகள் இப்படிக் கோளாறுடன் வெளிவருவது இது முதல் தடவையும் இல்லை. இதற்கு முன்பும் நோட் 7 பேட்டரிகள் வெடிக்கின்றன என்று லட்சக்கணக்கான மொபைல்களை திரும்பப்பெற்றது சாம்சங். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க