``11 ஆண்டு ஆயுள்,16 மில்லியன் நிறங்கள்!”- ஷியோமி ஸ்மார்ட் பல்பு ரகசியங்கள் | Xiaomi smart bulb will have 11 years life span

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (25/04/2019)

கடைசி தொடர்பு:12:25 (25/04/2019)

``11 ஆண்டு ஆயுள்,16 மில்லியன் நிறங்கள்!”- ஷியோமி ஸ்மார்ட் பல்பு ரகசியங்கள்

ஷியோமி

குறைந்த விலை, நிறைய வசதி. இதுதான் ஷியோமியின் தாரக மந்திரம். மொபைலில் தொடங்கிய இந்தப் பயணம் மற்ற கேட்ஜெட்களுக்கும் தொடர்ந்தது. சீனாவில் மின்னணு கேட்ஜெட்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான பல பொருள்களையும் அறிமுகம் செய்திருக்கிறது. இப்போது ஸ்மார்ட் பல்பு ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது ஷியோமி.

அது என்ன ஸ்மார்ட் பல்பு?

16 மில்லியன் நிறங்களை உமிழும் இந்த பல்பை நாம் டிஜிட்டலாக கன்ட்ரோல் செய்ய முடியும். அமேசான் எக்கோ அல்லது கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம் இதை ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியும். இதற்கெனத் தனியே எந்த நெட்வொர்க்கும் அமைக்கத் தேவையில்லை. MI செயலி மூலமாகவும் நம் மொபைலிலிருந்தே இயக்க முடியும். அதைவிட ஆச்சர்யமூட்டும் தகவல் அதன் ஆயுட்காலம்தான். 11 ஆண்டுகள் வரை இந்த பல்பு இயங்கும் என்கிறது ஷியோமி.

இந்த புராடக்ட்டை கிரவுட் ஃபண்டிங் மூலம் தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது ஷியோமி. அதாவது, ஒரு குறிப்பிட்டத் தொகையை டார்கெட்டாக அறிவிப்பார்கள். அந்தத் தொகையை முன்பதிவு மூலம் எட்டியதும் பல்பு தயாரிக்கப்பட்டு பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதன் மூலம் முதலீடும் கிடைக்கும், டிமாண்டு எவ்வளவு என்பதும் தெரிந்துவிடும். பல செலவுகளை இது குறைக்கும். ஷியோமி மீது இந்தியர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழகாக அறுவடை செய்கிறது ஷியோமி.

ஏப்ரல் 26 ம்தேதி இது பற்றிய அறிவிப்பை ஷியோமி வெளியிடவிருக்கிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க