`வாங்கினா ரூ 33,000 தான்... தொலைச்சா ரூ. 4 லட்சம்!' - இப்படியொரு மொபைல் கேள்விப்பட்டதுண்டா? | Price of this lost honor mobile is 4 lakhs

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (25/04/2019)

கடைசி தொடர்பு:15:25 (25/04/2019)

`வாங்கினா ரூ 33,000 தான்... தொலைச்சா ரூ. 4 லட்சம்!' - இப்படியொரு மொபைல் கேள்விப்பட்டதுண்டா?

ஹானர் மொபைல்


மொபைலைத் தொலைப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லைதான். பாக்கெட்டிலிருந்து நமக்கே தெரியாமல் கீழே விழலாம். சாப்பிடச் சென்ற இடத்தில் மறந்துவிட்டு வந்துவிடலாம். இப்படி இன்னும் பல வழிகளில் மொபைல் தொலையலாம். அப்படித் தொலைந்தால் அதே போல இன்னொரு மொபைல் வாங்கும் செலவுதான் நமக்கு. ஆனால், ஒருவர்  மொபைலைத் தொலைத்துவிட்டு தவியாய் தவிக்கிறார். காரணம், அவர் தொலைத்தது புரோட்டோ டைப் மாடல்.

அது என்ன புரோட்டோ டைப்? ஒரு பொருள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் முன் மாதிரிக்காகச் செய்யப்படுவதே புரோட்டோ டைப். அது ஒகே என்றால்தான் முழுமையான தயாரிப்புத் தொடங்கும். ஹானர் நிறுவனம் அப்படியொரு புரோட்டோ டைப் மாடலை உருவாக்கி, அதை டெஸ்டிங்குக்காக தன் ஊழியர் Moritz Scheidl வசம் கொடுத்திருந்தது. கடந்த 22ம் தேதி ஜெர்மனிக்குப் பறந்திருக்கிறார் மோரிட்ஸ். விடுமுறைக்காக ஜெர்மனி வந்தவர் மொபைலை சார்ஜ் போடத் தேடியிருக்கிறார். அப்போதுதான் அந்த மொபைல் காணாமல் போனதே அவருக்குத் தெரிந்திருக்கிறது. உடனே தன் மேலதிகாரிகளிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டார் மோரிட்ஸ். மேலதிகாரிகள் சும்மா விடுவார்களா? “ஒரு மொபைலைப் பாத்துக்கத் தெரியாதா?” என எப்படியும் அவரை வறுத்திருப்பார்கள்.  அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் அந்த மொபைல் யார் கையிலாவது கிடைத்தால் அது பற்றிய விஷயம் லீக் ஆகிவிடுமே எனப் பயந்து, இப்போது அந்த மொபைலைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 5000 யூரோ (ஏறத்தாழ 4 லட்சம்) பரிசு என அறிவித்திருக்கிறது ஹானர்.

ஹானட் ட்வீட்

”மொபைல் தொலைந்தது என்பதெல்லாம் கப்சா.. இது ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்ட்” எனக் கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
எல்லாம் மோரிட்ஸுக்குத்தான் தெரியும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க