சிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா?! பாருங்க #viralVideo | Ape uses smartphone to scroll Social Media #ViralVideo

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (25/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (25/04/2019)

சிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா?! பாருங்க #viralVideo

நமக்கு அடுத்து அறிவுத்திறன் அதிகம் உடைய விலங்காக கருதப்படுவது சிம்பன்ஸி. அப்படியான அது ஜாலியாக ஸ்மார்ட்போனை லாவகமாக கையில் பிடித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை ஸ்கோரல் (scroll) செய்து பார்க்கும் வீடியோ ஒன்று மக்களால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

முதலில் மனிதனுடன் குரங்கு விளையாடும் ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சிம்பன்ஸிக்கு அது சலிப்புத்தட்ட, வெளியே வந்து மற்ற போட்டோக்களையும் வீடியோக்களையும் அழகாக தேடிப் பிடித்துப் பார்க்கிறது. இப்படி அது புத்திசாலித்தனத்தை காட்டிய இந்த வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ முதலில் reddit தளத்தில் ஒரு கணக்கால் பதிவேற்றப்பட்டிருந்தது. அங்கிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என அனைத்து தளங்களுக்கும் இந்த வீடியோ சென்று இருக்கிறது.

ஸ்மார்ட்போன் நோண்டும் சிம்பன்ஸி

`நல்லா இருந்த சிம்பன்சியையும் கெடுத்துட்டீங்களேடா', `இதுதான் அழிவின் ஆரம்பம்' என `Planet of the apes' படத்தையெல்லாம் பலரும் நினைவுகூர்ந்தனர். அந்தப் படத்தில் மனிதர்களை வீழ்த்தி பூமியை ஆள வேண்டும் என முடிவெடுக்கும் ஏப்புகள். அதற்கு நாமே ஆரம்பப் புள்ளி போடுகிறோம் எனக் கலாட்டா செய்துவருகின்றனர் நெட்டிசன்கள். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க