ஐபோன் XR, சாம்சங் S10ல மட்டும்தானா? - ஒன் ப்ளஸ்ஸிலும் இனி உண்டு! | One plus 7 pro will have the similar feature which is available on iPhone XR and galaxy s10

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (29/04/2019)

கடைசி தொடர்பு:16:05 (29/04/2019)

ஐபோன் XR, சாம்சங் S10ல மட்டும்தானா? - ஒன் ப்ளஸ்ஸிலும் இனி உண்டு!

ஒன் ப்ளஸ் 7

பட்ஜெட் மொபைல்களில் ரெட்மி தான் ராஜா என்றால் மீடியம் செக்மென்ட்டில் ஒன் ப்ளஸ் ராஜாதி ராஜா. ஒன் ப்ளஸ் 5 மற்றும் ஒன் ப்ளஸ் 6 சீரிஸ் மொபைல்கள் விற்பனையிலும் சாதனை படைத்தன; ரசிகர்களையும் பெருமளவு சம்பாதித்தன. அடுத்து, ஒன் ப்ளஸ் 7க்காகக் காத்திருக்கும் ரசிகர்களுக்கும் அவ்வப்போது பல ஆச்சர்ய அப்டேட்ஸ் வந்துகொண்டேயிருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தச் செய்தியும்.

மே 14-ம் தேதி ஒன் ப்ளஸ் 7 மற்றும் 7 ப்ரோ என இரண்டு மொபைல்களை அறிமுகப்படுத்துகிறது ஒன் ப்ளஸ். இதில் ஒன் ப்ளஸ் 7 ப்ரோ சாம்சங் கேலக்ஸி 10 மற்றும் ஐபோன் எக்ஸ்.ஆர் மாடல்களுக்கே சவால் விடுமென்கிறார்கள். லட்சத்தைத் தாண்டும் அந்த இரண்டு மொபைல்கள் தரும் வசதிகளை அதில் பாதி விலையில் ஒன் ப்ளஸ் தருமென நம்பப்படுகிறது. 7 ப்ரோ மொபைலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டிஸ்ளேவுக்கு Displaymate நிறுவனம் A+ ரேட்டிங் தந்திருக்கிறது. இதைப் பெறும் முதல் ஒன் ப்ளஸ் மொபைல் 7 ப்ரோ தான். துல்லியம், பிரைட்னெஸ், கலர்ஸ் என இந்த டிஸ்ப்ளே தரப்போகும் அனுபவம் வேற லெவல் என அடித்து சத்தியம் செய்கிறது ஒன் ப்ளஸ். கேமிங் ரசிகர்களுக்கு இதைவிடச் சிறந்த டிஸ்ப்ளே கிடைக்காது; கண்களுக்கும் பாதுகாப்பான டிஸ்ப்ளேவாக இது இருக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

பின்புறம் 3 கேமராக்களும் முன்பக்கம் 48 மெகாபிக்ஸல் கேமராவும் கொண்ட மொபைலுக்கு இப்படியொரு டிஸ்ப்ளேவும் தேவைதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க