`இனி நீ நிம்மதியா தூங்கலாம் பிரிசில்லா!' மனைவிக்காக மார்க் உருவாக்கிய கேட்ஜெட் | Mark's new device to help her wife Pricsilla sleep

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (29/04/2019)

கடைசி தொடர்பு:19:30 (29/04/2019)

`இனி நீ நிம்மதியா தூங்கலாம் பிரிசில்லா!' மனைவிக்காக மார்க் உருவாக்கிய கேட்ஜெட்

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா எந்தக் கவலையுமின்றி நிம்மதியாகத் தூங்க `ஸ்லீப் பாக்ஸ்' என்னும் புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இதைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் மார்க். அதில் ``தாயாக இருப்பது கடினமானது. நாங்கள் குழந்தைகள் பெற்றதிலிருந்து அனைத்து இரவும் சரியாக தூங்காமல் அவர்கள் விழிக்கும் நேரம் வந்துவிட்டதா என செல்போனை அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருப்பார் பிரிசில்லா. அவர் நிம்மிதியாக தூங்க `ஸ்லீப் பாக்ஸ்' என நான் அழைக்கும் இந்தச் சாதனத்தை உருவாக்கினேன்." என்றார்.

ஸ்லீப் பாக்ஸ்

இது சரியாக குழந்தைகள் விழிக்கும் நேரமான காலை 6-7 மணியளவில் சிறிய ஒளியுடன் மிளிரும். கண் விழித்துப் பார்த்தால் நேரம் ஆகிவிட்டது என்பது புரியும். ஆனால் தூக்கத்தைக் கெடுக்காத அளவு குறைந்த ஒளியிலேயே மிளிரும். நேரம் எதுவும் காட்டாத இதை உபயோகிக்கத் தொடங்கியதிலிருந்து தனது மனைவி நன்றாகத் தூங்குவதாக தெரிவிக்கிறார் மார்க்.

மார்க் , மனைவி பிரிசில்லா

``எனது துணைக்கு இப்படி ஒரு சாதனத்தை உருவாக்குவதைவிட எனது காதலையும், அன்பையும் காட்ட சிறந்த வழி இருக்காதென்று நினைக்கிறேன்" என உருகிய அவர் தனது நண்பர்கள் பலரும் இதே போன்ற சாதனம் வேண்டுமெனக் கேட்பதாகவும், தொழில் தொடங்குவோர் யாரேனும் இதே போன்று மக்களுக்கு `ஸ்லீப் பாக்ஸ்' தயாரித்துக்கொடுக்கலாம் எனக் கூறினார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க