ஒன் ப்ளஸ் 6T வாங்க ஏற்ற நேரம் இதுதான்... அமேசானின் அசத்தும் ஆஃபர் | Oneplus 6T available discount price in Amazon

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (04/05/2019)

கடைசி தொடர்பு:15:57 (04/05/2019)

ஒன் ப்ளஸ் 6T வாங்க ஏற்ற நேரம் இதுதான்... அமேசானின் அசத்தும் ஆஃபர்

ஒன்பிளஸ்

இன்னும் சில நாள்களில் Oneplus 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாவதால்,  தற்போது விற்பனையில் இருக்கும் Oneplus 6T-யின் விலை இதுவரை இல்லாத அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை சம்மர் சேல் என்ற சிறப்பு விற்பனை அமேசானில் நடைபெறுவதன் காரணமாகவும் Oneplus 6T-யின் விலை குறைந்துள்ளது. கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இது, மிட் ரேன்ஜ் செக்மென்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. இதில், முதல் முறையாக இன்-கிளாஸ் ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரையும் கொடுத்திருந்தது ஒன்ப்ளஸ். 

oneplus  6T

இதன் 8GB ரேம் / 128GB இன்டர்னல் மெமரி வேரியன்ட் 41,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, தற்போது அமேசான் தளத்தில் 32,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி Oneplus 6T-யின் அனைத்து வேரியன்ட்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் மட்டுமின்றி ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் தள்ளுபடி விலையில் ஒன்ப்ளஸ் 6T-யை வாங்க முடியும். ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஒன்ப்ளஸ் 6T-யின் விற்பனை நிறுத்தப்படும் என்பதால், இந்த ஸ்மார்ட்போனை வாங்க சரியான நேரம் இதுதான்.