சாவன், அமேசான், ஸ்பாட்டிஃபை... மியூசிக் ஸ்ட்ரீமிங்கில் யார் கில்லி? #TechTamizha | Music Streaming War has began, May Month's Tech Tamizha is here

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (13/05/2019)

கடைசி தொடர்பு:16:41 (13/05/2019)

சாவன், அமேசான், ஸ்பாட்டிஃபை... மியூசிக் ஸ்ட்ரீமிங்கில் யார் கில்லி? #TechTamizha

ணக்கம் வாசகர்களே!

மே மாத டெக் தமிழா வெளியாகிவிட்டது. https://bit.ly/vikatanandroidapp

இன்று ஒரு மொபைலும் இணையச் சேவையையும் போதும். கிட்டத்தட்ட எந்தப் பாட்டையும் எங்கிருந்தும் கேட்டுவிட முடியும். கடந்த சில ஆண்டுகளில் இணைய சேவை அனைவருக்குமே கிடைக்கும் ஒன்றானது இதற்கு முக்கிய காரணம். மற்றொரு காரணம் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளின் வளர்ச்சி. விளம்பரங்களுடன் சேவைகளை இலவசமாகவே வழங்குவதால் முன்பு திருட்டு இணையதளங்களில் டவுன்லோடு செய்து கேட்டவர்கள்கூட இன்று ஸ்ட்ரீம் செய்துதான் பாடல்கள் கேட்கின்றனர். இந்நிலையில் இந்தியா என்னும் பெரிய சந்தையின் மதிப்பு தெரிந்து, இப்போது ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக் போன்ற முன்னணி சேவைகளும் கடந்த மாதங்களில் இங்கு களம் கண்டுள்ளன. இந்தச் சேவைகளின் ப்ளஸ், மைனஸ் என்ன, இதில் உங்களுக்கு பெஸ்ட்? விரிவான கட்டுரை உள்ளே.

“கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த ஃபேஸ்புக் இதுவல்ல. எங்களுடைய பிளாட்ஃபார்ம் மூலம் வரும் பாதிப்புகளையும்  பிரச்னைகளையும் குறைப்பதற்காகத்தான் நாங்கள் தற்போது பெருமளவு நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்” எனக் கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டேட்மென்ட் விட்டிருந்தார் மார்க் சக்கர்பெர்க். தற்போது அதன் அடுத்த வெர்ஷன் வந்துவிட்டது. அது The future is private. அண்மையில் நடந்து முடிந்த ஃபேஸ்புக் F8 கீ-நோட்டின் ஒட்டுமொத்த சாராம்சம் இதுதான். இதுவரைக்கும் உலக மக்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கப் போராடிக்கொண்டிருந்த(!) ஃபேஸ்புக், தற்போது அவர்களின் பிரைவசிக்காகவும் ‘முட்டு’ கொடுத்துக்கொண்டிருக்கிறது; அல்லது கொடுக்க வேண்டியிருக்கிறது. வெறுமனே ஃபேஸ்புக்கின் புது அப்டேட்கள் என மட்டும் இல்லாமல், அந்நிறுவனத்தின் புது ப்ளூபிரின்ட்டையே இதில் வெளியிட்டிருக்கிறார் மார்க். அது பற்றிய கட்டுரையும் இந்த மாத டெக் தமிழாவில்.

மேலும் ஸ்ட்ரீமிங் சந்தையில் களம்காணும் டிஸ்னி, குயிக் சார்ஜிங், ஆப்டிகல் ஜூமில் இருக்கும் ஆபத்துகள் எனப் பல விஷயங்களைத் தொடுகின்றன இந்த மாத கட்டுரைகள். 

டெக் தமிழா ஸ்ட்ரீமிங் ஸ்பெஷல்

இந்த மே மாத இதழை இலவசமாக விகடன் ஆப்பிலும் படிக்கலாம். https://bit.ly/vikatanandroidapp இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து (ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் https://apple.co/2EUWP8A லிங்க்கை க்ளிக் செய்யவும்), பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `டெக் தமிழா’ இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படிக்கலாம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். எங்களிடமிருந்து இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் கூற மறவாதீர்கள். நன்றி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்