'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்...' ஒன் ப்ளஸ்ஸைக் கலாய்க்கும் ரெட்மி | Redmi launch soon new flagship smartphone

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (15/05/2019)

கடைசி தொடர்பு:18:20 (15/05/2019)

'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்...' ஒன் ப்ளஸ்ஸைக் கலாய்க்கும் ரெட்மி

ரெட்மி

நேற்று ஒன் ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்ௐகளைப் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இந்த 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்ௐகளின் சில வேரியன்ட்களின் 50,000 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. எனவே, இதுவரை மிட் ரேன்ஜிசில் இருந்த ஒன் ப்ளஸ் ப்ரீமியம் செக்மென்ட்டுக்கு நகர்ந்திருக்கிறது. இதுவரை ஒன்ப்ளஸ்க்கு பெரிய அளவில் போட்டியாளர்கள் யாரும் கிடையாது. இந்நிலையில் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக புதிய ஸ்மார்ட்போனை ரெட்மி நிறுவனம் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தும் எனத் தெரிகிறது.

ஷியோமி

ஷியோமி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் ட்வீட் ஒன்றின் மூலமாக அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். 'புதிய ஸ்மார்ட்போனுக்காக வாழ்த்துகள் ஒன்ப்ளஸ் டீம் Flagship Killer 2.0: coming soon' எனத் தெரிவித்துள்ளார். அவர் இணைத்திருக்கும் படத்தைப் பார்க்கும்போது ரெட்மியின் புதிய Flagship ஸ்மார்ட்போனின் பெயர் Redmi K20-யாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ரெட்மி பட்ஜெட் செக்மென்ட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. தற்போது முதல் முறையாகச் சற்று விலை அதிகமான போன்களை வெளியிடவுள்ளது.