`ஆஹா ஓஹோ' டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா... எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ? | First look at Oneplus 7 series

வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (15/05/2019)

கடைசி தொடர்பு:20:28 (15/05/2019)

`ஆஹா ஓஹோ' டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா... எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ?

HDR 10+ சப்போர்ட்டுடன் ஸ்ட்ரீமிங் கன்டென்ட் பார்க்க சிறந்த ஸ்கிரீன் இதுதான் என்று நெட்ஃப்ளிக்ஸே சான்றிதழ் தருகிறது. ஸ்பீக்கர்களும் Dolby Atmos சப்போர்டுடன் வரும்

`ஆஹா ஓஹோ' டிஸ்ப்ளே, மினி DSLR கேமரா... எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ?

நேற்று பெங்களூரு, லண்டன், நியூயார்க் என மூன்று நகரங்களில் பிரமாண்டமான முறையில் தனது புதிய 7 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தியது ஒன்ப்ளஸ். ப்ரீமியம் ஃபிளாக்ஷிப் போன்கள் என்றாலே ஆப்பிள், சாம்சங்தான் என்ற நிலையை மாற்றிய ஒன்ப்ளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கத்தொடங்கி இந்த வருடத்துடன் 5 வருடங்கள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் ஒன்ப்ளஸ் பேராவலுடன் அறிமுகப்படுத்தியிருக்கும் போன் இப்போது வெளியாகியிருக்கும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவாகத்தான் இருக்கும். பெரிய பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன்களுக்கு டஃப் கொடுக்கும் என ஒன்ப்ளஸ் நம்பும் இதிலிருக்கும் சிறப்புகள் என்னென்ன?

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஹைலைட்ஸ்

ஒன்ப்ளஸ் 7 ப்ரோவை பொறுத்தவரை, முதல் முக்கிய ஹைலைட் இதன் டிஸ்ப்ளே. 'Fluid AMOLED' என ஒன்ப்ளஸ் அழைக்கும் இதில், நாட்ச், ஹோல் என எதுவுமே கிடையாது. முன்புறம் முழுவதுமே curved டிஸ்ப்ளேதான் (6.67"). QuadHD (1440x3120 px, 515 PPI) ஸ்கிரீனான இது 90Hz refresh rate-உடன் வருகிறது. அதாவது ஒரு விநாடிக்கு 90 முறை தனது ஸ்கிரீனில் இருப்பதை இதனால் மாற்றமுடியும். இதனால் ஒரு ஆப்பிலிருந்து இன்னொரு ஆப்பிற்குச் செல்வது தொடங்கி சின்னச் சின்ன விஷயங்கள்கூட இதில் மிகவும் ஸ்மூத்தாக இருக்கும். பயன்படுத்தத் தொடங்கிய சில நொடிகளில் மக்களால் இந்த வித்தியாசத்தை உணரமுடியும் என்கிறது ஒன்ப்ளஸ். HDR 10+ சப்போர்ட்டுடன் ஸ்ட்ரீமிங் கன்டென்ட் பார்க்க சிறந்த ஸ்கிரீன் இதுதான் என்று நெட்ஃப்ளிக்ஸே சான்றிதழ் தருகிறது. ஸ்பீக்கர்களும் Dolby Atmos சப்போர்ட்டுடன் வரும். 6T-யைப் போல இதிலும் இன்டிஸ்ப்ளே ஆப்டிக்கல் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இருக்கிறது. ஆனால் அதைவிடச் சற்றே வேகமாக இது இயங்கும். 

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ டிஸ்ப்ளே

இந்த போனில் இருப்பது குவால்காமின் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 855 புராசஸர். 6GB, 8GB, 12GB RAM என மூன்று வேரியன்ட்களில் இது விற்பனைக்கு வரும். 128GB, 256GB என ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் 7 ப்ரோதான் UFS 3.0 பயன்படுத்தும் முதல் மொபைல் சாதனமாக இருக்கும். இதனால் ஸ்டோரேஜ் சம்பந்தமான பரிமாற்றங்கள் 79% வரை வேகமாக இருக்கும். இது ஆப் பர்ஃபாமன்ஸிலும் தெரியும் என்கிறது ஒன்ப்ளஸ்.

புராசஸர்

அடுத்தது கேமரா. எப்போதும் மற்ற விஷயங்களில் டிஸ்டின்க்ஷன் பெற்றாலும் ஒன்ப்ளஸ் மற்ற ஃபிளாக்ஷிப் போன்களிடம் அடிவாங்குவது கேமராவில்தான். இம்முறை அப்படி நடந்துவிடக் கூடாது எனக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். பின்புறம் மூன்று கேமராக்களுடன் வரும் 7 ப்ரோ ஒரு `மினி DSLR' என்கிறது ஒன்ப்ளஸ். முன்னணி 48MP (Sony IMX586 sensor) கேமராவுடன் 16 MP wide angle கேமரா, 8 MP telephoto கேமராவும் இதில் வருகிறது. Sacred Games போஸ்டர்கள், நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டைப்படம் போன்றவை ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் எடுக்கப்பட்டவையே என ஒன்ப்ளஸ் கேமராவின் சிறப்பை முடிந்தளவு மக்கள் மத்தியில் பதியவைக்க முயல்கிறது.

நேஷனல் ஜியோகிராபிக் அட்டைப்படம்

நேஷனல் ஜியோகிராபிக் அட்டைப்படம்

P.C: @Oneplus

இதில் 16 MP செல்ஃபி கேமரா பாப்-அப் முறையில் வெளிவரும். 3 லட்சம் முறைகள் வரை இது எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கும். மேலும் செல்ஃபி எடுக்கும்போது தவறுதலாக போன் கீழே விழுந்தால் தானாக அதை அறிந்து இந்த கேமரா உள்ளே சென்றுவிடும். தரையில் விழுந்தால் மட்டுமல்ல; தலையணை மீது விழுந்தாலும் கேமரா பாதிக்கப்படாமல் இது பாதுகாக்கும். இதனால் பாப்-அப் கேமராக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்கிறது ஒன்ப்ளஸ்.

4000 mAh பேட்டரி என்றாலும் 90Hz டிஸ்ப்ளே என்பதால் சார்ஜ் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும் உடன்வரும் 30W வார்ப் சார்ஜ்ர் மூலம் 20 நிமிடத்தில் 0%-லிருந்து 40%-க்கு சார்ஜ் செய்யமுடியும். ஆனால் வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடையாது. IP வாட்டர்ஃப்ரூப் சான்றிதழும் கிடையாது. 3 நிறங்களில் வெளிவரும் இது ஆண்ட்ராய்டு 9 பையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட Oxygen OS-ல் இயங்கும். 

ஒன்ப்ளஸ் 7 ஹைலைட்ஸ்

இப்படி ஆரவாரமாக 7 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட பின் அமைதியாக ஒன்ப்ளஸ் 7 அறிமுகப்படுத்தப்பட்டது. 6T-யின் அண்ணன் போல இருக்கும் இது ஸ்னாப்டிராகன் 855 புராசஸருடன் வருகிறது. 7 ப்ரோவில் இருக்கும் அதே 48 MP (Sony IMX586 sensor) கேமராதான் இதில். ஆனால் மற்ற இரண்டு கேமராக்களுக்கு பதிலாக 5 MP டெப்த் கேமரா மட்டும் இதில் இருக்கிறது. 60Hz Full HD+ டிஸ்ப்ளே, இன்டிஸ்ப்ளே ஆப்டிக்கல் ஃபிங்கர்பிரின்ட் சென்சார், 16 MP செல்ஃபி கேமரா, 20W ஃபாஸ்ட் சார்ஜ் சப்போர்ட், 3700 mAh பேட்டரி... இவைதாம் ஒன்ப்ளஸ் 7 ஸ்பெக்ஸ்.

ஒன்ப்ளஸ் 7

இந்த இரண்டு போன்களுடன் இன்னொரு சாதனத்தையும் அறிமுகப்படுத்தியது ஒன்ப்ளஸ். அது புல்லட்ஸ் வயர்லெஸ் 2.0. உயர்தர ப்ளூடூத் இயர்போன்களான இது வார்ப் சார்ஜ் சப்போர்ட்டுடன் வருகிறது. 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் இது தாக்குப்பிடிக்கும். 

விலை

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ
6GB + 128GB- ₹ 48,999
8GB + 256GB- ₹ 52,999
12GB + 256GB- ₹ 57,999.

ஒன்ப்ளஸ் 7

6GB + 128GB- ₹ 32,999
8GB + 256GB- ₹ 37,999

ஒன்ப்ளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் 2.0 - ₹ 5,990

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்