இணைய வேகத்தில் `நம்பர் 1' சிங்கப்பூர்... `டிஜிட்டல் இந்தியா'வுக்கு என்ன இடம்? #VikatanInfograph | Internet speed around the world for downloading movies

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (20/05/2019)

கடைசி தொடர்பு:10:45 (20/05/2019)

இணைய வேகத்தில் `நம்பர் 1' சிங்கப்பூர்... `டிஜிட்டல் இந்தியா'வுக்கு என்ன இடம்? #VikatanInfograph

5GB அளவுள்ள ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய சராசரியாக இந்தியாவில் 2 மணி நேரம் 11 நிமிடம் 33 விநாடி நேரம் ஆகிறது. ஆனால் சிங்கப்பூரில் 11 நிமிடம் 18 விநாடி மட்டுமே.

இணைய வேகத்தில் `நம்பர் 1' சிங்கப்பூர்... `டிஜிட்டல் இந்தியா'வுக்கு என்ன இடம்? #VikatanInfograph

குறுகிய காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த இந்த டிஜிட்டல் உலகில் தற்போது, `இணையம் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். மொபைலிலிருந்து ஸ்மாட் டிவி வரை தற்போது அனைத்திற்கும் இணையம் தேவைப்படுகிறது. வீட்டில் ஒருவர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தினால் மொபைல் டேட்டாவே போதும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால்தான் பிராட்பேண்டு கனெக்‌ஷன் தேவைப்படுகிறது. என்னதான் தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தாலும், டவரே கிடைப்பதில்லை என்பது இப்போது வரை பலரின் புலம்பல். இதற்காகவே ACT, Hathway எனப் பல பிராட்பேண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கில் ஜி.பி.க்களைக் கொடுத்து வருகிறார்கள். 

broadband connection

சமீபத்தில் Worldwide broadband speed league, 200 நாடுகளைக் கொண்டு ஓர் ஆய்வை மேற்கொண்டது, அதாவது 5GB அளவுள்ள ஒரு திரைப்படத்தை எந்த நாட்டினர் எவ்வளவு வேகத்தில் டவுன்லோடு செய்கின்றனர் என்பதே அந்த ஆய்வு. இந்த ஆய்வில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்தது. இங்கு 11 நிமிடம் 18 விநாடியில் 5GB அளவுள்ள ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்துவிடுகின்றனர். இணையத்தின் வேகத்தைப் பார்த்தால் விநாடிக்கு 60.39 mbps. அதிவேக இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதில் மட்டும் முதலிடம் இல்லை. இணையப் பாதுகாப்பிலும் முதலிடத்தில் இருப்பதும் சிங்கப்பூர்தான். சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகிய துறைகளிலும் சிங்கப்பூர்தான் எப்போதும் முதலிடம்.

இணையம்

அதிவேக இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதில் இரண்டாவது இடத்தில் ஸ்வீடனும் (46.00 mbps), மூன்றாவது இடத்தில் டென்மார்க்கும் (43.99 mbps) உள்ளன. அடுத்தடுத்த இடத்தில் நார்வே (40.12 mbps), ரோமானியா (8.60 mbps), பெல்ஜியம் (36.71 mbps), நெதர்லாந்து (35.95 mbps) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தப்பட்டியலில் அமெரிக்கா (25.86 mbps) 20-வது இடத்திலும், இங்கிலாந்து (18.57 mbps) 35-வது இடத்திலும் இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் சீனா 2.38 mbps வேகத்தில் 141-வது இடத்தில் உள்ளது.

Internet Speed

நம்முடைய `டிஜிட்டல் இந்தியா' இந்தப் பட்டியலில் 88-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் விநாடிக்கு 5.19 mbps வேகத்தில் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 5GB அளவுள்ள ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய இந்தியாவில் 2 மணி நேரம் 11 நிமிடம் 33 விநாடி நேரம் ஆனது. மிகக் குறைவான வேகத்தில் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் காங்கோ குடியரசு, பர்கினா பாசோ, நைஜர், சிரியா, மவுரித்தேனியா, கினியா, சோமாலியா, துர்க்மெனிஸ்தான், கிழக்கு திமோர் போன்ற நாடுகள் உள்ளன. கடைசி இடமான 200-வது இடத்தில் ஏமன் நாடு உள்ளது. இங்கு 0.31 mbps என்ற வேகத்தில் இணையம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு, 5GB அளவுள்ள ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய 36 மணி நேரம் 52 நிமிடம் 20 விநாடி நேரம் ஆனது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்