`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி | No Android support for Huawei, announces Google

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (20/05/2019)

கடைசி தொடர்பு:15:25 (20/05/2019)

`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி

அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவிலும் மொபைல் சந்தையை ஆக்கிரமித்திருப்பது சீன நிறுவனங்கள்தான். விலை குறைவு, வசதிகள் அதிகம் போன்ற காரணங்களால் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் அரசாங்கங்கள் சீன மொபைல்களைப் பார்த்து சற்று பயப்படத்தான் செய்கின்றன. எங்கே தனது நாட்டின் ரகசியத் தகவல்கள் சீனாவுக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயம்தான் காரணம். இதனால் ட்ரம்ப் அரசின் கீழ் சீன நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அப்படிதான் கடந்த வாரம் அமெரிக்கா ‘Entity List’ என்னும் பட்டியலில் வாவே நிறுவனத்தைச் சேர்த்தது. அதாவது எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் முறையான உரிமம் பெறாமல் இந்தப் பட்டியலில் இருக்கும் நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யமுடியாது. இதைத் தொடர்ந்து வாவே நிறுவனத்துக்கு ஆண்ட்ராய்டு லைசென்ஸை ரத்து செய்துள்ளது கூகுள். 

வாவே ஆண்ட்ராய்டு

இதனால் வாவே போன்கள் இனி ஓபன் சௌர்ஸ் ஆண்ட்ராய்டை மட்டுமே பயன்படுத்தமுடியும். இதனால் கூகுள் ப்ளே, கூகுள் ப்ளே புரொடெக்ட், யூடியூப், கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளுக்கு நேரடி சப்போர்ட் இருக்காது. சீனாவின் வெளியே வாவேவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனெனில் ஆப்கள் பதிவிறக்க அனைவரும் பயன்படுத்துவது கூகுள் ப்ளே சேவையைத்தான், அதுதான் பாதுகாப்பானதுகூட. புதிய இயங்குதளம் ரெடி செய்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உடனுக்குடன் தொடங்கினாலும்கூட ஒரு வருடமாவது ஆகிவிடும்.

போன்

ஏற்கெனவே வாவே போன்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு OS அப்டேட்கள் இல்லையென்றாலும் கூகுள் ப்ளே மற்றும் கூகுள் ப்ளே புரொடெக்ட் சேவைகள் தொடரும் என்றே அறிக்கையில் தெரிவித்திருக்கிறது கூகுள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க