`டெக் பனிப்போர் ஆரம்பம்!' - தொடர்ந்து வாவேவை நெருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் | Tech Cold war heats up as Intel, Qualcomm breaks ties with Huawei

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (20/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (20/05/2019)

`டெக் பனிப்போர் ஆரம்பம்!' - தொடர்ந்து வாவேவை நெருக்கும் அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்காவை தங்கள் தயாரிப்புகள் மூலம் உளவு பார்ப்பதாக சந்தேகிக்கப்பட்டு வாவே நிறுவனத்துடன் வணிகம் நடத்தப் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அந்நாட்டின் ட்ரம்ப் அரசு. இதற்குக் கட்டுப்பட்டு வாவே போன்களுக்கு தங்களது ஆண்ட்ராய்டு லைசென்ஸை ரத்து செய்திருக்கிறது கூகுள். இது அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே அடுத்த அடியாக குவால்காம், இன்டெல், ப்ராடுகாம் போன்ற முன்னணி சிப் தயாரிக்கும் நிறுவனங்களும் வாவே நிறுவனத்துக்கு எதிராக இப்போது திரும்பியுள்ளன.

அமெரிக்கா சீனா டெக் பனிப்போர் வாவே

வாவேவின் ஹார்டுவேர் பிரிவு இந்த நிறுவனங்களைத்தான் பெருமளவில் நம்பியிருக்கின்றன. இப்போது இவர்களிடமிருந்து சிப்கள் வரவில்லை என்றால் வாவேவின் நிலைமை மிகவும் மோசம்தான். லேப்டாப் முதல் போன்கள் வரை அனைத்து தயாரிப்புகளையும் இது பாதிக்கும். இதுபோக வாவேவின் முக்கிய விநியோகஸ்தர்கள் எனக் கருதப்படும் 30-க்கும் மேலான அமெரிக்கா நிறுவனங்கள் இதே நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாவே

இப்படி சாப்ட்வேர், ஹார்டுவேர் என இப்படி இரண்டிலுமே வாவேவை நெருக்குகிறது அமெரிக்கா. இதிலிருந்து வாவே எப்படி மீளப்போகிறது என்பது அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்கா-சீனாவுக்கு இடையேயான டெக் பனிப்போரின் ஆரம்பம் இது என பேசத் தொடங்கிவிட்டனர் வல்லுநர்கள். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க