'ஜியோவுக்கு உதவுகிறதா டிராய்?' - ஜிகா டி.வி சேவையால் வலுக்கும் சந்தேகம்! | Is Trai helping Jio with Jio GigaTv launch?

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (24/05/2019)

கடைசி தொடர்பு:15:40 (24/05/2019)

'ஜியோவுக்கு உதவுகிறதா டிராய்?' - ஜிகா டி.வி சேவையால் வலுக்கும் சந்தேகம்!

 கிட்டத்தட்ட மொத்த இந்தியாவையும் தங்கள் நெட்வொர்க்கால் இணைத்துவிட்ட ஜியோவின் அடுத்த டார்கெட், ப்ராட்பேண்டு சந்தைதான். அடுத்த சில மாதங்களில், முக்கிய நகரங்களின் ஜியோ ஜிகா ஃபைபர் சேவை கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் கேபிள், DTH-க்கான டிராய் அமைப்பின் புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் மாறிய விலைகள், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது, இந்த விதிமுறைகளுக்கும் ஜியோவின் ஜிகா ஃபைபரின் அறிமுகத்திற்கும் மறைமுகத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

ஜியோ ஜிகாஃபைபர்

இந்த சந்தேகத்திற்குக் காரணம், ஜியோவின் இந்த  FTTH கனெக்ஷன் இணைய சேவையுடன் டி.வி சேவையும் உடன்வரும். இதற்காக ஜிகா டி.வி செட்-அப் பாக்ஸ் கொடுக்கப்படும். இதன்மூலம், இன்டர்நெட் மூலமே டி.வி பார்க்க முடியும். இதிலிருக்கும் ஆப் மூலம்           600-க்கும் மேலான சேனல்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். இப்படிச் செய்வதால், DTH சேவையாக இது கருதப்படாது என்றே தெரிகிறது.

டிராய்

வந்த சில நாள்களிலேயே மொபைல் சந்தையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கிய ஜியோ, இப்போது இந்தச் சந்தையிலும் அதையே செய்ய வாய்ப்புகள் அதிகம். டெலிகாம் நிறுவனங்களைப் போல இந்தச் சந்தையிலும் ஜியோவின் வளர்ச்சிக்கு டிராய் துணைபோகிறது என ஏற்கெனவே புகார்கள் எழத்தொடங்கியுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க