இந்தியர்களுக்காக இந்தியாவிலே யமஹா தயாரிக்கும் கீபோர்டு... என்ன ஸ்பெஷல்? | Yamaha manufactures keyboards in Chennai under make in India scheme

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (27/05/2019)

கடைசி தொடர்பு:15:45 (27/05/2019)

இந்தியர்களுக்காக இந்தியாவிலே யமஹா தயாரிக்கும் கீபோர்டு... என்ன ஸ்பெஷல்?

யமஹா கீபோர்டு

யமஹா, பைக்குகளுக்கு மட்டுமல்ல; இசைக்கருவிகளுக்கும் பெயர்பெற்றது. குறிப்பாக, யமஹா கீபோர்டுகள் நிறையப் பேரால் பயன்படுத்தப்படுபவை. இதுவரை யமஹா கீபோர்டுகள் அனைத்தும் உலகின் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இனி, காஞ்சிபுரத்துக்கு அருகிலிருக்கும் அதன் தொழிற்சாலையிலே உற்பத்திசெய்யப்படும்.

'Make In India' திட்டத்தின் கீழ் உருவாகும் இத்தொழிற்சாலையின் முதல் தயாரிப்பான PSR - I500 என்ற மாடல் கீபோர்டு, இன்று சென்னையில் அறிமுகம்செய்யப்பட்டது. இந்தியாவின் நான்கு திசைகளுக்கும் சென்று ஆராய்ச்சி செய்து, இந்தியாவின் தொன்மையான இசையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றதுபோல இந்த கீபோர்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாக, யமஹா மியூஸிக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் தகாஷி ஹாகா தெரிவித்தார்.

எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய போர்ட்டபிள் மாடல் கீபோர்டில் தபேலா, மிருதங்கம், தம்புரா என இந்திய இசைக்கருவிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 131 ஆண்டு பழைமையான யமஹா நிறுவனம், இந்தியாவின் இசைப் பாரம்பர்யத்தை உணர்ந்து, அதைப் போற்றும் வகையில் இம்முயற்சியை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

250 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு தந்திருக்கும் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இசைக்கருவிகளில், 60 சதவிகிதம் இந்திய சந்தைக்கானது. மற்றவை ஏற்றுமதி செய்யப்படும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க