கிரிக்கெட்டில் சென்னை Knowledgeable crowdதான்... இதோ இன்னோர் ஆதாரம்! | Chennai is knowledgeable crowd for cricket here is a proof

வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (31/05/2019)

கடைசி தொடர்பு:15:55 (31/05/2019)

கிரிக்கெட்டில் சென்னை Knowledgeable crowdதான்... இதோ இன்னோர் ஆதாரம்!

World cricket championship2, சுருக்கமாக WCC2 என்ற கிரிக்கெட் கேம்தான் உலகில் அதிக பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட கேம். 10 கோடிக்கும் அதிகமான முறை இந்த ஆப் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது. தினமும் 30 லட்சத்துக்கு அதிகமானோர் இந்த கேமை விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பல சர்வதேச கேமிங் நிறுவனங்களால்கூட நினைத்துப் பாக்க முடியாத யூஸர்கள் எண்ணிக்கை கொண்ட இந்த கேமை உருவாக்கியவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

கிரிக்கெட்டில் சென்னை Knowledgeable crowdதான்... இதோ இன்னோர் ஆதாரம்!

சென்னைக்கும் கிரிக்கெட்டுக்கும் எப்போதுமே தீராக்காதல் உண்டு. Knowledgable crowd எனப் புகழப்படுபவர்கள் நாம். 5 நாள் போட்டிகள் கூட ஹவுஸ்ஃபுல் ஆவது எல்லாம் இன்றைய காலகட்டத்தில் சென்னையில்தான் சாத்தியம். உலக அளவில் டி20ன் சிறந்த டீம் எனச் சென்னை சூப்பர் கிங்ஸை  சொல்லலாம். இப்படி, கிரிக்கெட்டில் அத்தனை வடிவத்திலும் இடம் பெற்றிருக்கும் சென்னை, மொபைல் கேம் விஷயத்தில் என்ன செய்திருக்கிறது தெரியுமா?

மொபைல் கேம்களில் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஆப்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதனாலே கிரிக்கெட், கால்பந்து போன்ற கேம்கள் லட்சக்கணக்கில் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும். அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து, அதிகப் பேரால் ஒரு ஆப் டவுன்லோடு செய்யப்படுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு நல்ல செயலி மட்டும் போதாது; செலவு செய்து விளம்பரமும் செய்ய வேண்டும். டவுன்லோடு செய்யும் அனைவரையும் தொடர்ந்து விளையாட வைக்க விளம்பரங்கள் உதவாது. அதற்கு நேர்த்தியான ஒரு புராடக்ட் வேண்டும். World cricket championship2, சுருக்கமாக WCC2 என்ற கேம்தான் உலகில் அதிக பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட கிரிக்கெட் கேம். 10 கோடிக்கும் அதிகமான முறை இந்த ஆப் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது. தினமும் 30 லட்சத்துக்கு அதிகமானோர் இந்த கேமை விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பல சர்வதேச கேமிங் நிறுவனங்களால்கூட நினைத்துப் பாக்க முடியாத யூஸர்கள் எண்ணிக்கை கொண்ட இந்த கேமை உருவாக்கியவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

கிரிக்கெட்

நெக்ஸ்ட்வேவ் மல்டிமீடியா என்ற நிறுவனத்தைத் தொடங்கி இந்த கேமை உருவாக்கியவர் ராஜேந்திரன். WCC2 மட்டுமன்றி இன்னும் பல ஆப்களை இவர் உருவாக்கியிருக்கிறார். பல சர்வதேச நிறுவனங்களுடன் கைகோத்து அவர்களுக்காக மொபைல் கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் உருவாக்கி வருபவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

“WCC2தான் டெடிக்கேட்டான ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் கேம். 50-க்கும் மேற்பட்ட ஃபேன் பேஜஸ் ஆக்டிவா இருக்கு. நாங்க கொடுக்க வேண்டிய அப்டேட்டை எப்பவாது டைமுக்குக் கொடுக்க முடியாம போனா எங்களை நச்சரிச்சு எடுத்துடுவாங்க. எனக்கு சந்தோஷம் என்னன்னா, இவ்ளோ பேர நாங்க விளம்பரம் மூலமா ரீச் பண்ணல. எல்லாமே ஆர்கானிக் வளர்ச்சிதான். பப்ஜி மாதிரியான கேம்களே விளம்பரத்துக்குன்னு கணிசமான தொகையைச் செலவு பண்ணிதான் இவ்ளோ ரீச் ஆயிருக்காங்க. நாங்க எதுவும் செலவு செய்யல. நல்ல புராடக்ட்டை உலகம் எப்பவும் ஒதுக்கிடாதுன்னு நாங்க நம்பினோம். அது நடந்துச்சு” என்றார் ராஜேந்திரன்.

அவர் சொல்வதும் உண்மைதான். WCC2-ன் வருமானம் விளம்பரங்கள் மூலம்தான். ஆனால், அவர்கள் ஆப்பை எங்கேயும் விளம்பரம் செய்யவில்லை. Word of mouth மூலமாகப் பரவிதான் 2016, 2017, 2018 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்தியாவிலே daily active users அதிகம் கொண்ட கேம் என்ற விருதை வென்றது WCC2. இது மட்டுமல்ல; 6 சர்வதேச விருதுகள் உட்பட 17 விருதுகளை வென்று குவித்துள்ளது இந்த கிரிக்கெட் கேம்.

“WCC2 மட்டுமல்ல... சென்னை சூப்பர் கிங்ஸோட அதிகாரபூர்வ கேமான battle of chepaukம் நாங்க உருவாக்கினதுதான். போலவே, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்காக ‘Big Bash Cricket’ ம் உருவாக்கினோம். இந்த இரண்டும்கூட ஹிட் கேம்ஸ்தான்” என மகிழ்ந்தார் ராஜேந்திரன்.

உலகக் கோப்பைக்காக புது அப்டேட் வெளியிடும் பணியின் மும்முரமாக இருந்தது அவர் டீம். அடுத்து என்ன மாதிரியான அப்டேட்களை எதிர்பார்க்கலாம் என அவரிடம் கேட்டேன்.

“புது கமென்ட்ரி கொடுக்கப்போறோம். அதுக்காக மேத்யூ ஹைடன்கூட ஒப்பந்தம் போட்டிருக்கோம். விரைவில் அது வரும். அப்புறம் தமிழ் கமென்ட்ரிக்கு திட்டமிட்டிருக்கோம். WCC rivalsன்னு மல்ட்டி ப்ளேயர் கேம் ஏற்கெனவே வெளியிட்டுருக்கோம். கிரிக்கெட்டும் இந்தியர்களும் ரொம்ப க்ளோஸ். அவங்களுக்காகத் தொடர்ந்து அப்டேட்ஸ் வந்துட்டேயிருக்கும் எங்ககிட்டருந்து” என்றார்.

ராஜேந்திரன் மொபைல் கேம்ஸ் போட்டியில் அடித்திருப்பது ஃப்ரீ ஹிட் சிக்ஸ் அல்ல. யார்க்கராக சீறிய பந்தை லாங் ஆனில் தூக்கி அடித்த சிக்ஸர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்